ADVERTISEMENT

GCC Traffic Week 2025: வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்துவதைத் தடுக்க புதிய விழிப்புணர்வு பிரச்சாரம்..!!

Published: 15 Apr 2025, 8:25 PM |
Updated: 15 Apr 2025, 8:25 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலைகளைப் பாதுகாப்பானதாக்கவும், ஓட்டுநர்கள் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கவும், ‘GCC Traffic Week 2025’ என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒரு புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

ஏப்ரல் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் இந்த பிரச்சாரம், “Driving Without a Phone” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படுகிறது. மேலும் ஓட்டுநர்கள் சாலையில் செல்லும்போது கவனம் செலுத்தவும், தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் இந்த பிரச்சாரம் ஊக்குவிக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த RTA உள்துறை அமைச்சகம், துபாய் காவல்துறை, எமிரேட்ஸ் ஓட்டுநர் நிறுவனம் மற்றும் மிச்செலின் டயர்களுடன் இணைந்து செயல்படுகிறது. வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்தி பிடிபடும் வாகன ஓட்டிகளுக்கு திர்ஹம் 800 அபராதம் மற்றும் அவர்களின் உரிமத்தில் நான்கு கருப்புப் புள்ளிகள் விதிக்கப்படும் என்பதை ஆணையம் நினைவூட்டியுள்ளது.

ADVERTISEMENT

வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்துவது உங்கள் எதிர்வினை நேரத்தை (reacting time) 80% வரை குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுவதையும், இது குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற ஒரு ஆபத்தான செயல் என்பதையும் இந்த பிரச்சாரத்தின் மூலம் RTA வலியுறுத்தியுள்ளது. முடிந்தவரை இந்த பிரச்சாரம் பலரையும் சென்றடைவதை உறுதிப்படுத்த, RTA பல விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது.

அதில் உள்துறை அமைச்சகத்தால் ஷார்ஜாவில் நடத்தப்படும் ஒரு கண்காட்சி, பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக நல நிகழ்வுகள், சமூக ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் RTA சேவை மையங்களில் பாதுகாப்பு செய்திகள் ஆகியவையும் இந்த பிரச்சாரத்தில் அடங்கும்.

ADVERTISEMENT

அமீரகத்தில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்தும் வேளையில் போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்கும் நகரம் முழுவதும் பொறுப்பான வாகனம் ஓட்டும் பழக்கத்தை வாகன ஓட்டிகளிடம் ஊக்குவிப்பதற்கும் துபாயின் நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாக இந்தப் பிரச்சாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel