ADVERTISEMENT

ஏப்ரல் 23 முதல் மக்காவிற்குள் நுழைய அதிகாரப்பூர்வ அனுமதி அவசியம்..!! சவூதி அரசு அறிவிப்பு..!!

Published: 21 Apr 2025, 4:46 PM |
Updated: 21 Apr 2025, 6:02 PM |
Posted By: Menaka

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் பெருமக்களின் புனித நகரமான மக்கா அதன் வருடாந்திர ஹஜ் பருவத்தில் மில்லியன் கணக்கான வழிபாட்டாளர்களின் வருகைக்கு தயாராகி வரும் நிலையில்,  சவுதி அரேபியா ஹஜ் அணுகல் விதிமுறைகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது என்று பொது பாதுகாப்பு இயக்குநரகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன் படி, வரும் புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025 (25 ஷவ்வால் 1446 AH) முதல், சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் குடிமக்களும் மக்காவில் நுழைய அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும், செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாதவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது புனித பயணத்தின் போது பாதுகாப்பு மற்றும் சீரான அமைப்பை உறுதி செய்வதற்கான சவூதி அரசின் வருடாந்திர முயற்சியின் ஒரு பகுதியாக வந்துள்ளது. எனவே இந்த அறிவிப்பின்படி மக்காவிற்குள் நுழைய அனைவரும் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்:

ADVERTISEMENT
  1. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஹஜ் சீசனுக்கான பணி அனுமதி
  2. மக்காவில் பதிவுசெய்யப்பட்ட வசிப்பிடச் சான்று
  3. அதிகாரப்பூர்வ ஹஜ் அனுமதி

மக்கா நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

உள்துறை அமைச்சகத்தின் பின்வரும் தளங்கள் மூலம் ஆன்லைனில் அனுமதிகள் வழங்கப்படுகின்றன. சவுதி அரேபியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம், ஹஜ் சீசனில் பணிபுரியும் வெளிநாட்டினர் பாஸ்போர்ட் அலுவலகங்களுக்குச் செல்லாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  • அப்சர் (Absher Individuals)
  • முகீம் தளம் (Muqeem)
  • Tasreeh அமைப்பு (Tasreeh)

கட்டாய ஹஜ் அனுமதிகள்

ஹஜ் அனுமதிகளை அதிகாரப்பூர்வ “nusuk” தளத்தின் மூலம் மட்டுமே பெற வேண்டும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் உம்ரா, சுற்றுலா அல்லது விசிட் விசாக்கள் மூலம் ஹஜ்ஜில் பங்கேற்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

போலி ஹஜ் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் பரவும் உரிமம் பெறாத தங்குமிடம் அல்லது போக்குவரத்து அல்லது போலி அனுமதிகளை வழங்குவதாக உறுதியளிக்கும் மோசடி ஹஜ் சலுகைகளுக்கு எதிராக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அவசர ஹாட்லைன்கள் அல்லது உள்ளூர் அதிகாரிகள் மூலம் மோசடிகளைப் புகாரளிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

Tasreeh மற்றும் Tawakkalna ஒருங்கிணைப்பு

சவுதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையத்துடன் (SDAIA) உருவாக்கப்பட்ட புதிய Tasreeh தளம், வழிப்பட்டாளர்கள், தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அனுமதி வகைகளையும் நிர்வகிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அனுமதிகளை தவக்கல்னா (Tawakkalna) செயலி மூலம் அணுகலாம்.

உம்ரா வழிப்பாட்டாளர்களுக்கான காலக்கெடு

உம்ரா விசா வைத்திருப்பவர்கள் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறுவதற்கான கடைசி நாள் செவ்வாய், ஏப்ரல் 29, 2025 (1 துல்-கீதா 1446 AH) என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தேதிக்கு மேல் தங்குவது கடுமையான சட்டக் குற்றமாகக் கருதப்படுகிறது, மேலும் இது அபராதங்கள், சிறைத்தண்டனை, நாடுகடத்தல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel