ADVERTISEMENT

சவுதியில் காலாவதியான விசாவில் தங்கியிருந்தால் 50,000 ரியால் அபராதம்.. 6 மாதம் சிறைத்தண்டனை..!!

Published: 23 Apr 2025, 10:33 AM |
Updated: 23 Apr 2025, 6:43 PM |
Posted By: Menaka

2025 ஹஜ் சீசன் நெருங்கி வருவதால், சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாவில் வந்த சுற்றுலாவாசிகள், விசா நாட்களை விட நாட்டில் அதிகமாக தங்குவது குறித்து சவுதி அரேபிய அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில் ஹஜ், உம்ரா அல்லது டூரிஸ்ட் ஆகிய விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை விட அதிகமாக தங்குபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக சவுதியின் உள்துறை அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், விசா நாட்களை விடவும் கூடுதலாக நாட்டில் தங்கும் வெளிநாட்டவர்களுக்கு 50,000 சவுதி ரியால் அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விதிமீறலில் ஈடுபட்டவர்கள் சவுதியில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், ஹஜ் மற்றும் உம்ரா விதிமுறைகளை மீறுவது இலகுவாக எடுத்துக்கொள்ளப்படாது என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் சவுதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கைகள் சவுதி அரேபியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சட்டபூர்வமான புனித ஹஜ் பயணத்திற்கான பருவத்தை உறுதி செய்வதற்கான சவுதி அரேபிய அரசு எடுத்து வரும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT