ADVERTISEMENT

துபாய் இளவரசருக்கு ஜெர்சியை பரிசளித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்….

Published: 10 Apr 2025, 9:03 AM |
Updated: 10 Apr 2025, 9:14 AM |
Posted By: Menaka

​​துபாயின் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மும்பையில் இந்திய கிரிக்கெட் வீரர்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) மூத்த அதிகாரியையும் சந்தித்தார்.

ADVERTISEMENT

மும்பைக்கு சென்றடைந்த ஷேக் ஹம்தான், ICC தலைவர் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்ட்யா ஆகியோருடன் ஒரு சுருக்கமான கலந்துரையாடலை நடத்தினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, ஷேக் ஹம்தான் “துபாய்” மற்றும் அதில் 11 என்ற எண் கொண்ட டீம் இந்தியா ஜெர்சி ஷேக் ஹம்தானுக்கு வழங்கப்பட்டது. அந்த ஜெர்சியை ஏந்தியபடி சர்மாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

Sheikh Hamdan (centre) with (from left) Suryakumar Yadav, Rohit Sharma, Jay Shah, and Hardik Pandya in Mumbai.

ADVERTISEMENT

இந்த சந்திப்பின் புகைப்படங்களை பட்டத்து இளவரசர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார், “Team India Ke Saath Ek Yaadgaar Mulakath (டீம் இந்தியாவுடனான ஒரு மறக்கமுடியாத சந்திப்பு)” என்ற தலைப்புடன் ஒரு படத்தை வெளியிட்டார். இந்தப் பதிவு தற்பொழுது அனைத்து ஊடகங்களிலும் வைரலாகி வருகின்றது.

துபாய் இளவரசரின் இந்திய பயணத்தின் போது, ​​துபாய் பட்டத்து இளவரசர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பயணம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel