ADVERTISEMENT

துபாய் ஏர்போர்ட்டில் ஸ்மார்ட் கேட்ஸை யார் பயன்படுத்தலாம்?? பதிவு செய்துள்ளதை எப்படி சரிபார்ப்பது..?? எவ்வாறு பயன்படுத்துவது?

Published: 18 Apr 2025, 11:47 AM |
Updated: 18 Apr 2025, 11:56 AM |
Posted By: Menaka

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டை முடிக்க நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருக்கும் அவசியமின்றி, ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்தி நொடிகளில் செயல்முறையை முடிக்க முடியும். ஆனால், பயணிகள் இந்த ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்த ஏற்கெனவே பதிவு செய்திருக்க வேண்டும். துபாய் விமான நிலையங்களில் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு சோதனைச் சாவடியை சமீபத்தில் கடந்து சென்ற பெரும்பாலான சர்வதேச பயணிகள் ஸ்மார்ட் கேட்ஸுக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கலாம். இருந்தபோதிலும் நீங்கள் GDRFA-துபாய் மூலம் தகுதியுடையவரா என்பதை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

ADVERTISEMENT

எனவே, GDRFA-துபாயின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான gdrfad.gov.ae இல் கிடைக்கும் ‘Inquiry for Smart Gate Registration’ ஆன்லைன் சேவையின் மூலம் ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்த நீங்கள் தகுதியுடையவரா என்பதை எப்போதும் சரிபார்க்கலாம்.

நீங்கள் பதிவுசெய்துள்ளீர்களா என்பதை எவ்வாறு சரிபார்ப்பது?

1. முதலில் gdrfad.gov.ae என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும்

ADVERTISEMENT

2. முகப்பு பக்கத்தில் ‘Inquiry for Smart Gate Registration’ என்ற சேவையைப் பார்க்கும் வரை ஸ்க்ரோல் செய்யவ்ய்ம்.
3. பின்னர், ‘Start Service’ என்பதைக் கிளிக் செய்யவும்
4. சரிபார்க்க பின்வரும் வழிகளில் ஒன்றைத் தேர்வு செய்யவும்:

  • கோப்பு எண் (file number – உங்கள் விசாவிலிருந்து)
  • ஒருங்கிணைந்த எண் (UDB- unified number)
  • எமிரேட்ஸ் ஐடி எண்
  • பாஸ்போர்ட் எண்

5. இப்போது, உங்கள் பிறந்த தேதி மற்றும் பாலினத்தை உள்ளிடவும்
6. அடுத்தபடியாக, கேப்ட்சாவை நிரப்பி ‘submit’ என்பதைக் கிளிக் செய்யவும்

ADVERTISEMENT

நீங்கள் பதிவுசெய்திருந்தால், இவ்வாறு தோன்றும்.

Once you have entered your details, you will then be informed by GDRFA-Dubai if you are registered for Smart Gates.

ஸ்மார்ட் கேட்ஸை யார் பயன்படுத்தலாம்?

GDRFA இன் படி, 1.2 மீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட பதிவுசெய்யப்பட்ட பயணிகள் ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்தத் தகுதியுடையவர்கள். அதற்கு நீங்கள் பின்வருவனவற்றில் ஒருவராகவும் இருக்க வேண்டும்:

  • UAE அல்லது GCC குடிமகன்
  • UAE குடியிருப்பாளர்கள் (UAE Residents)
  • அரைவலின் போது விசா பெறும் பயோமெட்ரிக் பாஸ்போர்ட் கொண்ட சுற்றுலாவாசி
  • ஷெங்கன் விசா வைத்திருப்பவர்

விமான நிலையத்தில் ஸ்மார்ட் கேட்ஸை எவ்வாறு பயன்படுத்துவது?

1. பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்மார்ட் கேட் பகுதிக்குள் நுழையுங்கள்
2. அங்கு குறிக்கப்பட்ட இடங்களில் நிற்கவும்
3. முக கவசங்கள், கண்ணாடிகள் அல்லது தொப்பிகள் போன்ற முகத்தை மறைக்கும் எந்தவொரு பொருளையும் அகற்றவும். போர்டிங் பாஸ் மற்றும் பாஸ்போர்ட்டை கையில் வைத்திருக்கவும்

4. கேமராவில் உள்ள பச்சை விளக்கைப் பார்க்கவும்
5. ஸ்கிரீனில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்
6. உங்கள் பயோமெட்ரிக்ஸ் அங்கீகரிக்கப்பட்டவுடன், ஸ்மார்ட் கேட்ஸ் திறக்கப்படும், அத்துடன் உங்கள் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு செயல்முறை முடிந்து விடும்.

ஒரு வேளை அமீரகக் குடியிருப்பாளர்களாக இருந்தால் தங்கள் எமிரேட்ஸ் ஐடி அல்லது பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை. கேமராவைப் பார்த்து சில வினாடிகள் காத்திருந்தால் போதும், கணினி உங்கள் முழுப் பெயரையும் புகைப்படத்தையும் மீட்டெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel