ADVERTISEMENT

துபாய் வருபவர்களுக்கு வழங்கப்படும் குளோபல் வில்லேஜுக்கான இலவச டிக்கெட்டுகள்..!!

Published: 30 Apr 2025, 4:52 PM |
Updated: 30 Apr 2025, 4:54 PM |
Posted By: Menaka

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் ஹத்தா பார்டர் கிராஸிங் வழியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு பாஸ்போர்ட் முத்திரைகளுடன் குளோபல் வில்லேஜுக்கான இலவச நுழைவு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது. துபாயின் அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘Year of Community’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கை பார்வையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதையும் துபாயின் வரவேற்பு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக இயக்குனரகம் தெரிவித்துள்ளது. GDRFA ஆல் பகிரப்பட்ட புகைப்படங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபலமான பன்முக கலாச்சார குடும்ப இடமான குளோபல் வில்லேஜுக்கு இலவச டிக்கெட்டுகள் மற்றும் தங்கள் பாஸ்போர்ட்  இரண்டையும் வைத்திருக்கும் மகிழ்ச்சியான சுற்றுலாப் பயணிகளைக் காட்டுகின்றன.

இது குறித்து GDRFA இன் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி கூறுகையில், இந்த முயற்சி துபாயின் சமூகத்தை மேம்படுத்துதல், விருந்தோம்பலை மேம்படுத்துதல் மற்றும் விருந்தினர்கள் மீது நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டை ஆதரிக்கிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கிடையில், வரவிருக்கும் மே 11ஆம் தேதி குளோபல் வில்லேஜின் சீசன் 29 கோடைகாலத்திற்காக அதிகாரப்பூர்வமாக முடிவடைய உள்ளதால், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சீசன் முடியும் வரை இலவச நுழைவு வழங்கப்படும் என்பதையும் குளோபல் வில்லேஜ் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT