ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான போக்குவரத்து விதிமீறல்கள் பதிவாகியுள்ள நிலையில், பெரும்பாலான விபத்துகளுக்கு வேகம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்பது உள்துறை அமைச்சகம் (MOI) வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் ரோல்ஓவர்கள் (roll over), பின்புற மோதல்கள் மற்றும் சாலைகளை விட்டு விலகிச் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது போன்ற ஆபத்தான விபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
வேகமாக வாகனம் ஓட்டுவதற்கான கடுமையான அபராதங்கள்:
- குறிப்பிட்ட வேக வரம்பை விட மணிக்கு 80 கிமீ-க்கு மேல் வாகனம் ஓட்டினால்: 3,000 திர்ஹம்ஸ் அபராதம், 23 ப்ளாக் பாய்ண்ட்ஸ், 60 நாள் வாகன பறிமுதல்
- மணிக்கு 60 கிமீ மேல்: 2,000 திர்ஹம்ஸ் அபராதம், 12 ப்ளாக் பாய்ண்ட்ஸ், 30 நாள் வாகன பறிமுதல்
- மணிக்கு 60 கிமீ வரை: 1,500 திர்ஹம்ஸ் அபராதம், 6 ப்ளாக் பாய்ண்ட்ஸ், 15 நாள் வாகன பறிமுதல்
எனவே, சாலைகளில் பாதுகாப்பாக இருக்கவும் அபராதங்களைத் தவிர்க்கவும், ஓட்டுநர்கள் குறிப்பிட்ட வேக வரம்புகளைப் பின்பற்றவும், திடீர் பாதை மாற்றங்களைத் தவிர்க்கவும், கவனச்சிதறல்களைக் குறைக்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வேக வரம்புகள் மற்றும் அபராதங்கள் குறித்த முக்கிய புதுப்பிப்புகள் எமிரேட் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அபுதாபி:
1. குறைக்கப்பட்ட வேக வரம்புகள் வருகின்ற ஏப்ரல் 14, 2025 முதல் அமலுக்கு வரும்:
- ஷேக் கலீஃபா பின் சையத் சர்வதேச சாலை (E11): 160 → 140 கிமீ/மணி
- அபுதாபி–ஸ்வீஹான் சாலை (E20): 120 → 100 கிமீ/மணி
2. குறைந்தபட்ச வேக விதி (ஷேக் முகமது பின் ரஷீத் சாலை):
- இடதுபுறம் 2 பாதைகள்: மணிக்கு 120 முதல் 140 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்ட வேண்டும்
- மணிக்கு 120 கிமீக்குக் கீழே வாகனம் ஓட்டினால் 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்
3. புதிய வரம்புகளைக் காட்டும் சிவப்பு சாலை அடையாளங்கள்:
- குறைந்த வேக மண்டலங்களை ஓட்டுநர்களுக்கு தெரியப்படுத்த பல முக்கிய சாலைகள் இப்போது சிவப்பு அடையாளங்களில் குறிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய அபுதாபி சாலைகளில் திருத்தப்பட்ட வேக வரம்புகள்:
- சாஸ் அல் நக்ல் அருகே அபுதாபி–அல் அய்ன் சாலை (E-22): வேக வரம்பு மணிக்கு 120 கிமீ/மணியிலிருந்து 100 கிமீ/மணிக்குக் குறைக்கப்பட்டது.
- ஸ்வீஹான் பிரிட்ஜ் அருகே ஷேக் முகமது பின் ரஷீத் ஸ்ட்ரீட் (E-311): மணிக்கு 140 கிமீ/மணியிலிருந்து 120 கிமீ/மணிக்குக் குறைக்கப்பட்டது.
- பனியாஸ் சிமிட்ரிக்கு அருகிலுள்ள அதே சாலை: மணிக்கு 120 கிமீ/மணியிலிருந்து 100 கிமீ/மணிக்குக் குறைக்கப்பட்டது.
- ஷேக் சையத் பிரிட்ஜ் அருகே ஷேக் சையத் பின் சுல்தான் ஸ்ட்ரீட் (E-10): வேக வரம்பு மணிக்கு 120 கிமீ/மணியிலிருந்து 100 கிமீ/மணிக்குக் குறைக்கப்பட்டது.
- ஷேக் கலீஃபா பின் சயீத் சாலை (E-12):
- ஜுபைல் ஐலேண்டிற்கும் சாதியத்துக்கும் இடையில்: மணிக்கு 140 கிமீ வேகம் மணிக்கு 120 கிமீ வேகமாகக் குறைக்கப்பட்டது
- சாதியத் ஐலேண்டில்: மணிக்கு 120 கிமீ வேகம் மணிக்கு 100 கிமீ வேகமாகக் குறைக்கப்பட்டது.
துபாய்:
துபாயில், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் துபாய் காவல்துறையின் அறிவிப்பின் படி, 2024 ஆம் ஆண்டில் சாலையின் வேகவரம்புகள் மாற்றப்பட்டன. முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு:
- ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட்: துபாய் அல் அய்ன் சாலையிலிருந்து அகாடமிக் சிட்டி ரவுண்டானா வரை 100 கிமீ/மணி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- அதே நேரத்தில் ரவுண்டானாவிலிருந்து அல் கவானீஜ் ஸ்ட்ரீட் வரை 90 கிமீ/மணி
- அல் அமர்டி ஸ்ட்ரீட்: அல் கவானீஜ் ஸ்ட்ரீட் மற்றும் எமிரேட்ஸ் ரோடிற்கு இடையில் 90 கிமீ/மணி
ஷார்ஜா:
அல் வஹ்தா மற்றும் அல் இத்திஹாத் சாலைகள்: அபு ஷகாரா மற்றும் அல் தாவூன் பிரிட்ஜ் இடையே வேகம் மணிக்கு 100 கிமீ/மணியிலிருந்து 80 கிமீ/மணியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ராஸ் அல் கைமா:
- ஷேக் முகமது பின் சலீம் ஸ்ட்ரீட்: ஜனவரி 2025 முதல் வேகம் மணிக்கு 80 கிமீ ஆகக் குறைக்கப்பட்டது
- அல் வதன் சாலை: போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்த வேகம் மணிக்கு 120 கிமீ ஆக அதிகரிக்கப்பட்டது
அமீரக அரசாங்கம் சாலை பாதுகாப்பை கருத்தில்கொண்டு, வேக வரம்புகளை திருத்துதல், பலகைகளை மேம்படுத்துதல் மற்றும் அபராதங்களை கண்டிப்பாக அமல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒத்துழைப்பு தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel