ADVERTISEMENT

வெளிநாட்டு வர்த்தகத்தில் புதிய சாதனை படைத்த அமீரகம்.. இறக்குமதிகளை விட ஏற்றுமதிகளே அதிகம்..

Published: 21 Apr 2025, 5:50 PM |
Updated: 21 Apr 2025, 5:50 PM |
Posted By: Menaka

உலகளவில் ஐக்கிய அரபு அமீரகமானது மிக அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகின்றது. பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடமாக சமீப காலங்களில் முன்னணி வகித்து வருகின்றது. இவை மட்டுமல்லாமல் வர்த்தகத்திலும் அமீரகம் முத்திரை பதித்து வருகிறது. அதன்படி கடந்த 2024 இல் வெளிநாட்டு வர்த்தகத்தில் மட்டும் 5.23 டிரில்லியன் திர்ஹம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை வர்த்தகம் செய்து ஒரு பெரிய சாதனையை அமீரகம் படைத்துள்ளது. இது 2021 உடன் ஒப்பிடும்போது 49% அதிகமாகும்.

ADVERTISEMENT

இது அமீரகத்தின் வேகமான வளர்ச்சியையும் உலகளாவிய வணிகத்திற்கு இன்னும் முக்கியமான இடமாக மாறி வருவதையும் பிரதிபலிக்கிறது. இது குறித்த செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், அமீரகத்தின் வர்த்தக உபரி (trade surplus) 490 பில்லியன் திர்ஹம்ஸை தாண்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பொருள் அமீரகம் இறக்குமதி செய்ததை விட அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது. எனவே, இது ஆரோக்கியமான பொருளாதாரத்தின் வலுவான அறிகுறியாகும் என்று துபாய் ஆட்சியாளர் கூறியுள்ளார்.

இது குறித்து வெளியான புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டில் எண்ணெய், தங்கம், மின்னணுவியல் போன்ற பொருட்கள் ஏற்றுமதி 2.2 டிரில்லியன் திர்ஹம்களை எட்டி நாட்டின் வர்த்தக செயல்திறனில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன, இது முந்தைய ஆண்டை விட 6% அதிகம் என்று கூறப்படுகின்றது. மேலும், சுற்றுலா, சாப்ட்வேர், டிஜிட்டல் சேவைகள் போன்ற சேவை ஏற்றுமதிகள் 650 பில்லியன் திர்ஹம்ஸை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், ஆன்லைன் தளங்கள், செயலிகள் போன்ற டிஜிட்டல் சேவைகள் மட்டுமே 191 பில்லியன் திர்ஹம்ஸை ஈட்டியுள்ளது. டிஜிட்டல் வர்த்தகத்தில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி நாட்டின் வெற்றிகரமான டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதுமை சார்ந்த துறைகளில் முதலீட்டை எடுத்துக்காட்டுகிறது என்று ஷேக் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் முதன்மை:

மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாட்டு ஏற்றுமதிகளிலும் ஒப்பிடுகையில் ஐக்கிய அரபு அமீரகம் இப்போது 41 சதவீதத்தை கொண்டுள்ளது. பெரிய பொருளாதார மற்றும் வர்த்தக சவால்களை எதிர்கொள்ளும் உலகில், ஐக்கிய அரபு அமீரகம் தொடக்கத்திலிருந்தே வர்த்தகம், பணம் மற்றும் மக்களின் சுதந்திரமான இயக்கத்திற்கான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இன்று, அது கிழக்கு மற்றும் மேற்கு இடையே ஒரு பாலமாகவும் உலகளாவிய பொருளாதார மையமாகவும் மாறியுள்ளது என்று ஷேக் முகம்மது தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதற்கிடையில், வெளிநாட்டு வர்த்தகத்திற்கான துணை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் செயூடிதி (Dr Thani bin Ahmed Al Zeyoudi), அமீரகம் கடந்த ஆண்டு 492.3 பில்லியன் வர்த்தக உபரியுடன் உலகளவில் 11 வது இடத்தையும், சேவைகள் ஏற்றுமதியில் 13 வது இடத்தையும் பிடித்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து வர்த்தகத்தை எளிதாக்குதல், ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் உலகளாவிய சர்வதேச கூட்டாண்மை மூலம் ஐக்கிய அரபு அமீரகம் அதன் உலகளாவிய பங்கை தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பெரிய வர்த்தக வெற்றி, அமீரகம் உலகின் முன்னணி பொருளாதார மற்றும் வர்த்தக நாடுகளில் ஒன்றாக மாறி வருவதைக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel