ADVERTISEMENT

துபாயில் வரவிருக்கும் ‘UAE-India Friendship Hospital’- தொழிலாளர்களுக்கு மலிவு விலையில் மருத்துவ சேவை!!

Published: 10 Apr 2025, 8:38 PM |
Updated: 10 Apr 2025, 8:55 PM |
Posted By: Menaka

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இந்தியாவிற்கு முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த போது, UAE மற்றும் இந்தியா இடையே பல முக்கிய ஒத்துழைப்புகளை அறிவித்திருந்தார், இதில் துபாயில் உள்ள இந்திய குடியிருப்பாளர்களை குறிப்பாக ப்ளூ காலர் தொழிலாளர்களை ஆதரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற மருத்துவமனை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார இணைப்பை அதிகரிக்க ஒரு மெய்நிகர் வர்த்தக வழித்தடத்தைத் தொடங்குவது ஆகியவை அடங்கும்.

ADVERTISEMENT

ஏப்ரல் 9, 2025 அன்று, மும்பையில் துபாய் சேம்பர்ஸ் ஏற்பாடு செய்த ஒரு சிறப்பு நிகழ்வின் போது UAE-இந்தியா நட்பு மருத்துவமனைக்கான (UIFH) ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஒப்பந்தத்தின் படி, துபாயில் UAE-இந்தியா நட்பு மருத்துவமனை (UIFH -UAE-India Friendship Hospital) நிறுவப்படும் என்ற அறிவிப்பு முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இந்த வரவிருக்கும் மருத்துவமனை துபாய் ஹெல்த்  மற்றும் ஐந்து இந்திய வணிகத் தலைவர்களுக்கு இடையிலான கூட்டாண்மை மூலம் கட்டப்படும் என்றும், இது தொழிலாளர்களுக்கு இலவச அல்லது மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அமர் ஷெரீப்பும்  KEF ஹோல்டிங்ஸின் தலைவர் ஃபைசல் கொட்டிக்கோல்லோன், அப்பேரல் குழுமத்தின் தலைவர் நிலேஷ் வேத், புய்மெர்க் கார்ப்பரேஷனின் நிர்வாகத் தலைவர் சித்தார்த் பாலச்சந்திரன், EFS நிறுவன துணைத் தலைவர் தாரிக் சவுகான் மற்றும் டிரான்ஸ்வேர்ல்ட் குழுமத்தின் தலைவர் ரமேஷ் எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

Dubai: UAE-India Friendship Hospital for workers announced after Sheikh Hamdan's visit

இந்த கூட்டாண்மைக்கு கூடுதலாக, துபாய் இளவரசரின் இரண்டு நாள் பயணத்தின் போது எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் (MoUகள்) கையெழுத்தானதாக அறிக்கைகள் கூறுகின்றன. அதாவது, உள்கட்டமைப்பு, கல்வி, கடல்சார் சேவைகள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அதிகரித்த தனியார் துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Dubai: UAE-India Friendship Hospital for workers announced after Sheikh Hamdan's visit

மேலும், DP World மற்றும் இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனமான RITES ஆகியவற்றுக்கு இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தம் லாஜிஸ்டிக்ஸை மேம்படுத்துவதையும், இரு நாடுகளின் பொருளாதார இலக்குகளை ஆதரிக்கும் ஸ்மார்ட், தொழில்நுட்பம் சார்ந்த விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

ஒட்டுமொத்தத்தில், ஷேக் ஹம்தானின் இந்திய வருகை, சுகாதாரம் மற்றும் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுடன், ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான பாதையை உருவாக்கியுள்ளது என்றும் கூறலாம். அத்துடன் இந்த மருத்துவமனையானது துபாயின் ஜபெல் அலி பகுதியில் அமைக்கப்படும் என பேச்சுவார்த்தை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel