ADVERTISEMENT

இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய அமீரக அதிபர்.. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிப்பு..!!

Published: 27 Apr 2025, 5:01 PM |
Updated: 27 Apr 2025, 5:04 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், சனிக்கிழமையன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் இரு நாடுகளின் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்ததாகவும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஷேக் முகமது தனது இரங்கலைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக தெரிவித்த ஷேக் முகமது, அனைத்து வழிகளிலும் பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் மோடி, ஷேக் முகமதுவின் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்ச்சியான வெற்றி மற்றும் செழிப்புக்கு வாழ்த்து தெரிவித்ததாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT