ADVERTISEMENT

அமீரகத்தின் முக்கிய சாலைகளில் புதுப்பிக்கப்பட்ட வேகவரம்புகள்: ஓட்டுநர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை…

Published: 20 Apr 2025, 8:28 PM |
Updated: 20 Apr 2025, 8:28 PM |
Posted By: Menaka

அமீரகம் முழுவதும் வாகனம் ஓட்டும் குடியிருப்பாளர்கள் புதுப்பிக்கப்பட்ட வேக வரம்புகள் பற்றி அறிந்திருப்பது போக்குவரத்து அபராதங்கள் மற்றும் பிளாக் பாயிண்ட்ஸ்களை தவிர்ப்பதற்கு உதவும். சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட 2025 புதுப்பிப்பில், அதிகாரிகள் பல முக்கிய சாலைகளில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வேக வரம்புகளை திருத்தியுள்ளனர். அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

1. E311 (ஷேக் முகமது பின் ரஷீத் சாலை – அபுதாபி)

முந்தைய குறைந்தபட்ச வேகம் (இடதுபுற பாதை): 120 கிமீ/மணி ஆக இருந்தது. ஆனால், ஏப்ரல் 14 முதல் குறைந்தபட்ச வேக வரம்பு நீக்கப்பட்டது. முன்பு, 120 கிமீ/மணிக்குக் குறைவாக வாகனம் ஓட்டியதற்காக வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விதியை நீக்கி இருப்பது பெரும்பாலான வாகன ஓட்டிகளின் வரவேற்பை பெற்று வருகின்றது.

New speed limits in UAE: These 4 roads announced changes in 2025

ADVERTISEMENT

2. அபுதாபி – ஸ்வீஹான் சாலை (E20 / சர்வதேச விமான நிலைய சாலை)

சர்வதேச விமான நிலைய சாலை (E20) என்றும் அழைக்கப்படும் இந்த சாலையில் முன்பு, வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ ஆக இருந்த நிலையில், ஏப்ரல் 14 முதல், மணிக்கு 100 கி.மீ ஆகக் குறைக்கப்பட்டது.

New speed limits in UAE: These 4 roads announced changes in 2025

ADVERTISEMENT

3. ஷேக் கலீஃபா பின் சையத் சர்வதேச சாலை (E11)

அபுதாபியில் உள்ள E11 சாலையில் மணிக்கு 140 கி.மீ என்ற புதிய வேகவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய வரம்பு மணிக்கு 160 கி.மீ ஆக இருந்தது. E11 என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக நீளமான சாலையாகும், இது அபுதாபியை துபாய் உடன் இணைக்கிறது, மேலும் ஷார்ஜா, அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா வழியாக நீண்டுள்ளது. துபாயில், இது ஷேக் சையத் சாலை என்று அழைக்கப்படுகிறது.

New speed limits in UAE: These 4 roads announced changes in 2025

4. ராஸ் அல் கைமா – ஷேக் முகமது பின் சலீம் ஸ்ட்ரீட்

ராஸ் அல் கைமாவில் உள்ள ஷேக் முகமது பின் சலீம் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஜனவரி 17 முதல் புதிய வேக வரம்பு அறிவிக்கப்பட்டது. வேகத்தால் ஏற்படும் விபத்துகளின் வாய்ப்பைக் குறைக்க மாற்றியமைக்கப்பட்ட இந்த புதிய வேக வரம்பு ஷேக் முகமது பின் சையத் ரவுண்டானா (அல் ரிஃபா) முதல் அல் மர்ஜன் ஐலேண்ட் ரவுண்டானா வரை இருக்கும். கூடுதலாக, ரேடார் வேக வரம்பு முந்தைய 121 கிமீ/மணிக்கு பதிலாக 101 கிமீ/மணிக்கு மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பிப்புகள் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்து ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், வழக்கமான மற்றும் கனரக வாகனங்களை இடமளிப்பதற்கும் ஒரு பரந்த முயற்சியை பிரதிபலிக்கின்றன. அபராதங்களைத் தவிர்க்க புதுப்பிக்கப்பட்ட பலகைகளைக் கவனிக்கவும், தகவலறிந்திருக்கவும் வாகன ஓட்டிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel