ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) முன்னறிவிப்பின்படி, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்றும் வானிலை சற்று வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் (humid) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் இன்று வெப்பமான வானிலையை அனுபவிக்கக்கூடும், அதாவது இன்று வெப்பநிலை 50°C ஐ நெருங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
NCM வெளியிட்ட அறிவிப்பின் படி, வானிலை பெரும்பாலும் வெயிலாக இருக்கும், இருப்பினும் சில கிழக்குப் பகுதிகள் அவ்வப்போது மேகமூட்டத்தால் சூழப்பட்டு காணப்படும் என்று கூறப்படுகின்றது. இது போல் நேற்றும் வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில் அமீரகத்தில் அதிகபட்சமாக ஃபுஜைராவின் தவியனில் நேற்று மதியம் 1:30 மணிக்கு 46.6°C வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அமீரகத்தில் இவ்வாறு அதிகரிக்கும் வெப்பநிலைக்கு கூடுதலாக, இன்று தூசி நிறைந்த பலத்த காற்றும் மணிக்கு 15–25 கிமீ வேகத்தில் வீசும் என்றும் சில சமயங்களில் மணிக்கு 45 கிமீ வேகத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறிப்பிட்ட பகுதிகளில் தெரிவுநிலையை (visibility) கணிசமாகக் குறைக்கும். எனவே வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் நிலைமைகளைப் பொறுத்தவரை, அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் இரண்டும் லேசானதாக இருக்கும் என்றும் முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அபுதாபியில் அதிகபட்சம் 44°C வரையிலும், துபாயில் அதிகபட்சமாக 42°C வரையிலும் வெப்பநிலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இரு எமிரேட்டுகளிலும் குறைந்தபட்சம் 10°C வரையிலும் பதிவாகும் என்றும் NCM கூறியுள்ளது.
இதற்கிடையில், லிவாவில் அதிகபட்சமாக 46ºC வரை வெப்பநிலை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அமீரகக் குடியிருப்பாளர்கள் அதிக வெப்ப நேரங்களில் நீரேற்றத்துடன் இருக்கவும், வெளியில் செல்வதை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel