புர்ஜ் கலீஃபாவுக்கு அருகில் உள்ள டவுன்டவுன் துபாயில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற துபாய் ஃபவுன்டைன், மேம்பாட்டு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் கடைசி நிகழ்ச்சியானது கடந்த ஏப்ரல் 19 அன்று நடைபெற்றது. Emaar நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பிரபலமான துபாய் ஃபவுன்டைன் சுமார் ஐந்து மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.
துபாய் ஃபவுன்டைன் மறுசீரமைப்பிற்கு உட்படும் அதே நேரத்தில், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இது போன்ற பல்வேறு கண்கவர் ஃபவுன்டைன் நிகழ்ச்சிகளை அனுபவிக்க முடியும், அவற்றில் பல இசை, ஒளி, நெருப்பு மற்றும் நீர் ஆகியவற்றை இணைத்து சிலிர்ப்பூட்டும் அனுபங்களை தரும் மற்றும் இதனை பார்க்க முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற இடங்களுக்கு செல்ல விரும்பும் பார்வையாளர்கள் கின்னஸ் உலக சாதனை படைத்தவை முதல் உயர் தொழில்நுட்ப லேசர் நிகழ்ச்சிகள் வரை, துபாய் மால் ஃபவுன்டைன் மீண்டும் திறக்கப்படும் வரை ஆராய ஆறு கவர்ச்சிகரமான இடங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
‘IMAGINE’ – துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்
ஃபெஸ்டிவல் பேக்கு (festival bay) எதிராக அமைக்கப்பட்ட ‘IMAGINE’, கின்னஸ் உலக சாதனையை வென்ற நீர் மற்றும் ஒளி நிகழ்ச்சியாகும். இது உலகின் மிகப்பெரிய நீர் திரை ப்ரொஜெக்ஷன் (water screen projection) மற்றும் மிகப்பெரிய நிரந்தர ப்ரொஜெக்ஷன் மேப்பிங்கிற்கான (permanent projection mapping) பட்டங்களை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 360 டிகிரி ஃபவுன்டைன், அதிக சக்தி வாய்ந்த லேசர்கள் மற்றும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான ஒளி ஆகியவற்றைப் பயன்படுத்தி கண்காட்சிகள் நடத்தப்படும்.
காட்சி நேரங்கள்:
- திங்கள்–வியாழன்: ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும், மாலை 7–10 மணி
- வெள்ளி–ஞாயிறு: ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும், மாலை 7–11 மணி
2. ஷார்ஜா மியூசிக்கல் பவுன்டைன் – அல் மஜாஸ் வாட்டர்ஃபிரண்ட்
இந்த ஃபவுன்டைன் 220 மீட்டருக்கு மேல் நீண்டுள்ளது மற்றும் 100 மீட்டர் உயரம் வரையில் செல்லக்கூடியது. அல் மஜாஸ் வாட்டர்ஃபிரண்டில் அமைந்துள்ள இது, கலீத் லகூனில் இசை, லேசர் விளக்குகள் மற்றும் நீர் நடனக் கலையை ரசிக்க பார்வையாளர்களுக்கு அமைதியான சூழலை வழங்குகிறது.
காட்சி நேரங்கள்:
சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை தினமும் மாலை நிகழ்ச்சிகள் நடைபெறும், அதே போல் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவுகளிலும் நடைபெறும்.
3. ‘Surreal Waterfall’– எக்ஸ்போ சிட்டி துபாய்
ஜூபிலி டிஸ்டிரிக்டில் அமைந்துள்ள சர்ரியல் ஃபவுன்டைன், ஈர்ப்பு விசையை மீறி நீர் மேல்நோக்கிப் பாய்வது போல் தோன்றும் ஒரு நவீன அற்புதமாகும். WET டிசைன் நிறுவனம் (புர்ஜ் கலீஃபா பவுண்டைன் குழு) மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் இசையமைப்பாளர் ராமின் த்ஜாவதி ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவல், கலை, தொழில்நுட்பம் மற்றும் ஒலியை ஒன்றிணைத்து ஒரு தனித்துவமான உணர்வு அனுபவத்தை அளிக்கிறது.
திறக்கும் நேரம்:
தினசரி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை (தனியார் நிகழ்வுகளின் போது மூடல்களுக்கு உட்பட்டது)
4. ‘ Khorfakkan Waterfall’- ஷார்ஜா
ஷார்ஜாவின் கிழக்கு கடற்கரையில் ஒரு இயற்கையான பாறை ஓரத்தில் செதுக்கப்பட்ட கோர்பக்கன் ஃபவுன்டைன், ரோமானிய பாணி ஆம்பிதியேட்டரை ஒட்டிய 45 மீட்டருக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அருவியாகும். இந்த தளம் இரவில் அழகாக ஒளிரும். 3,500 க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய அருகிலுள்ள ஆம்பிதியேட்டர், நவீன குளிரூட்டும் அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் தொடர்ந்து பொது நிகழ்வுகளை நடத்துகிறது. நீர்வீழ்ச்சி மற்றும் ஆம்பிதியேட்டர் இரண்டும் இங்கு அழகிய காட்சிகளை வழங்குகிறது.
5. துபாய் மெரினா மியூசிக்கல் ஃபவுன்டைன்
துபாய் மெரினா டவர்ஸுக்கு அருகில் மெரினா வாக்கின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த சிறிய பவுண்டைன், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒத்திசைக்கப்பட்ட நீர் மற்றும் ஒளி காட்சிகளை வழங்குகிறது. அதனுடன் வரும் இசையின் அடிப்படையில் ஒரு ஸ்மார்ட் கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு காட்சியையும் ஒத்திசைக்கிறது.
காட்சி நேரங்கள்:
தினசரி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
6. தி ஃபவுண்டைன்ஸ் – யாஸ் ஐலேண்ட், அபுதாபி
யாஸ் மால், ஃபெராரி வேர்ல்ட் மற்றும் CLYMB அபுதாபி இடையே அமைந்துள்ள தி ஃபவுண்டைன்ஸ், உணவு விருப்பங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் ஒரு பிரத்யேகமான சூழ்நிலையை வழங்குகிறது. அருகிலுள்ள உணவகங்களில் ஒன்றில் உணவருந்தும்போது பார்வையாளர்கள் நீர் நிகழ்ச்சியை அனுபவிக்கலாம்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் துபாய் ஃபவுண்டைன் மீண்டும் கண்கவர் காட்சிகளுடன் வரவுள்ள நிலையில், அதுவரை பார்வையாளர்கள் மேற்கூறப்பட்ட இடங்களுக்கு சென்று அனுபவங்களை பெறலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel