ADVERTISEMENT

சூப்பரான ஆஃபர்களில் பொருட்களை அள்ளித்தர வந்தாச்சு “துபாய் சம்மர் சர்ப்ரைசஸ்-2025”..!! தொடங்கப்படும் தேதி அறிவிப்பு..!!

Published: 23 May 2025, 6:23 PM |
Updated: 23 May 2025, 6:24 PM |
Posted By: Menaka

ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் துபாய் குடியிருப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (Dubai Summer Surprise – DSS)’ இந்தாண்டு அதன் 28வது பதிப்பில் அதிரடி விற்பனை மற்றும் மெகா பொழுதுபோக்கு சலுகைகளுடன் அடியெடுத்து வைக்க உள்ளது. சுமார் 66 நாட்கள் கண்கவர் வானவேடிக்கை மற்றும் அதிரடி தள்ளுபடிகளுடன் களைகட்டும் DSSஐ துபாய் ஃபெஸ்டிவல்ஸ் மற்றும் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட் (DFRE) நிறுவனம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகிறது.

ADVERTISEMENT

இவ்வாறு விரைவில் தொடங்கவிருக்கும் துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (DSS) 2025 சிறந்த சில்லறை விற்பனை ஒப்பந்தங்கள், உணவு சலுகைகள், நேரடி பொழுதுபோக்கு மற்றும் குடும்ப செயல்பாடுகளின் அற்புதமான வரிசையை உறுதியளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் ஃபெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்டால் (Dubai Festivals and Retail Establishment-DFRE) ஏற்பாடு செய்யப்பட்ட ‘DSS 2025’ வரவிருக்கும் ஜூன் 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெறும் என்றும், இது நகரம் முழுவதும் 66 நாட்கள் சிறந்த தள்ளுபடி பிரச்சாரங்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சில்லறை விற்பனை பிரச்சாரங்கள்

DFREஇன் படி, இந்த ஆண்டு DSS மூன்று முக்கிய ஷாப்பிங் பிரச்சாரங்களைக் கொண்டிருக்கும்:

ADVERTISEMENT
  • Summer Holiday Offers (ஜூன் 27 – ஜூலை 17)
  • Dubai Summer Mega Sale (ஜூலை 18 – ஆகஸ்ட் 10)
  • Back to School (ஆகஸ்ட் 11 – 31)

ஒவ்வொரு பிரச்சாரத்திலும் நகரெங்கும் உள்ள சிறந்த ஷாப்பிங் இடங்களில் பிரத்தியேக தள்ளுபடிகள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் வெகுமதி திட்டங்கள் ஆகியவை நிரம்பியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜூலை 4–12 வரை ‘Dubai Restaurant Week’ உணவு ஆர்வலர்களுக்கு சிறந்த உணவு அனுபவத்தை வழங்கவுள்ளது, இது நகரம் முழுவதும் உள்ள முன்னணி உணவகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மெனுக்களை வழங்குகிறது.

உணவு அனுபவங்களுடன் கூடுதலாக, DSS 2025-ல் பனா, அடோனிஸ் மற்றும் ஷ்ரேயா கோஷல் போன்ற பிரபல பாடகர்களின் நேரடி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம். இவற்றுடன் ‘Made in Kuwait’ என்ற சிறப்பு நாடக தயாரிப்பு ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் துபாய் ஓபராவில் அரங்கேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதல் அம்சங்கள்

  • தினசரி 12 மணி நேர ஃபிளாஷ் விற்பனை
  • ஹோட்டல் பேக்கேஜ்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் குடும்ப சலுகைகள்
  • அதிக மதிப்புள்ள பரிசுகளுடன் கூடிய ராஃபிள் டிராக்கள்

மேற்கூறியவை தவிர, நிகழ்வுகளின் முழு வரிசைகள் தேதிகளுடன் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel