அமீரக செய்திகள்

துபாயில் பல்வேறு பிராண்டுகளில் 90% வரை தள்ளுபடிகள் வழங்கும் 3 நாள் சூப்பர் சேல்..!! எப்போது..??

இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு துபாயில் 3 நாள் சூப்பர் சேல் (3 Day Super Sale) தொடங்கவுள்ளது. இந்த மாபெரும் விற்பனை நிகழ்வில் நூற்றுக்கணக்கான பிரபலமான பிராண்டுகளில் 90% வரை தள்ளுபடிகளை அனுபவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 30 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் இந்த விற்பனையில், 2,500 விற்பனை நிலையங்களில் 500க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் அதிரடி சலுகைகள் இடம்பெறும், இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஃபேஷன், எலெக்ட்ரானிக்ஸ், வீட்டுப் பொருட்கள் மற்றும் பலவற்றில் குறிப்பிடத்தக்க சேமிப்பை அனுபவிக்க வாய்ப்பளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விற்பனை நடைபெறும் இடங்கள்:

ஷாப்பிங் நிகழ்வு பின்வரும் மால்கள் மற்றும் ஷாப்பிங் இடங்களில் நடைபெறும்:

  • புர்ஜுமான்
  • சிட்டி சென்டர் அல் ஷிண்டகா
  • சிட்டி சென்டர் தேரா
  • சிட்டி சென்டர் மெய்செம்
  • சிட்டி சென்டர் மிர்டிஃப்
  • சிட்டி வாக்
  • துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்
  • துபாய் ஹில்ஸ் மால்
  • துபாய் அவுட்லெட் மால்
  • ஃபெஸ்டிவல் பிளாசா
  • இபின் பட்டுடா மால்
  • மால் ஆஃப் தி எமிரேட்ஸ்
  • மெர்காடோ
  • நாட் அல் ஷேபா மால்
  • நக்கீல் மால்
  • தி அவுட்லெட் வில்லேஜ்
  • WAFI மால்

சிறப்பு சலுகைகள்:

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் ஒரு சிறப்பு spend & win ப்ரோமோஷன் நடைபெறும், இதில் 300 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள் 20,000 திர்ஹம்ஸ் மால் கிஃப்ட் கார்டை வெல்ல ஒரு டிராவில் நுழையலாம். குறிப்பாக, ஃபேஷன் பொருட்கள் வாங்கும் போது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை இரட்டிப்பாக்கும் என்று துபாய் விழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் (DFRE) ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த ப்ரோமோஷனை ஏற்பாடு செய்துள்ள துபாய் ஃபெஸ்டிவல்ஸ் மற்றும் ரீடைல் விற்பனை நிறுவனம் (DFRE), நகரத்தின் மிகப்பெரிய கோடை ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு விழாவான துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) 2025 ஜூன் 27 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. 3 நாள் சூப்பர் சேல், வாடிக்கையாளர்கள் ஈத் தினத்திற்கு முந்தைய சலுகைகளைப் பெறவும், கோடைகாலத்தை பெரும் சேமிப்புடன் தொடங்கவும் ஒரு சரியான வாய்ப்பை வழங்குகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!