துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) திங்களன்று நாத் அல் ஷெபாவில் ஒரு புதிய பாலம் கட்டப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது துபாய்-அல் அய்ன் சாலையிலிருந்து பயண நேரத்தை தற்போதைய ஆறு நிமிட பயணத்திலிருந்து ஒரு நிமிடமாகக் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் நடப்பு ஆண்டான 2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, இது 2026 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் நிறைவடையும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் செயல்பாட்டுக்கு வந்ததும், நாத் அல் ஷெபாவில் சுமார் 30,000 குடியிருப்பாளர்களுக்கு போக்குவரத்து ஓட்டத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. RTA வெளியிட்டுள்ள விபரங்களின் படி, இந்த இருவழிப் பாலம் தோராயமாக 700 மீட்டர் நீளம் இருக்கும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு 2,600 வாகனங்களை அனுமதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் நாத் அல் ஷெபாவில் வளர்ந்து வரும் குடியிருப்பு சமூகங்களுக்கு சேவை செய்யும் என்று கூறப்படுகின்றது.
இது துபாய்-அல் அய்ன் சாலையிலிருந்து அல் அய்ன் நோக்கி உள்வரும் போக்குவரத்திற்கு நேரடி பாதையை வழங்கும் மற்றும் இந்த பகுதியில் உள்ள முக்கிய என்ட்ரி மற்றும் எக்ஸிட் இடங்களில் நெரிசலைக் குறைக்கும் என்று RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயின் விரைவான மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் நகர்ப்புற விரிவாக்கத்திற்கு ஏற்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான RTAவின் பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது. இது நாத் அல் ஷெபாவில் சமீபத்திய பல போக்குவரத்து மேம்பாடுகளையும் பின்பற்றுகிறது:
- புதிய பாலங்கள் மற்றும் இன்டர்செக்ஷன்கள்: மேதான் மற்றும் அருகிலுள்ள மேம்பாடுகளை நோக்கிய இயக்கத்தை சீராக்க, நாத் அல் ஷெபா ஸ்ட்ரீட் மற்றும் துபாய்-அல் அய்ன் சாலை இன்டர்செக்ஷனில் RTA சமீபத்தில் 170 மீட்டர் பாலத்தைத் திறந்தது.
- பள்ளி மண்டல மேம்பாடுகள்: ரெப்டன் பள்ளி மற்றும் அல் கலீஜ் சர்வதேச பள்ளியைச் சுற்றியுள்ள மேம்பாடுகளில் (10,000 மாணவர்களுக்கு சேவை செய்கிறது) விரிவாக்கப்பட்ட பார்க்கிங் மற்றும் பாதுகாப்பான டிராப்-ஆஃப்/பிக்-அப் பகுதிகள் அடங்கும்.
- போக்குவரத்து ஓட்ட மேம்பாடுகள்: லத்திஃபா பின்த் ஹம்தான் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு சிக்னல் ஜங்ஷன் ஒரு ரவுண்டானாவாக மாற்றப்பட்டது, இதனால் போக்குவரத்து தாமதங்கள் 50% குறைக்கப்பட்டன. மேதான் ஸ்ட்ரீட்டிற்கான புதிய என்ட்ரி/எக்ஸிட் பாயின்ட்ஸ் காரணமாக, பகுதியின் சில பகுதிகளில் பயண நேரம் 60% குறைக்கப்பட்டது.
- உள் சாலைகள்: நாத் அல் ஷெபா 1, 3 மற்றும் 4 முழுவதும் ஒருங்கிணைந்த உள் சாலை நெட்வொர்க்கை RTA உருவாக்கியது. இது உள்ளூர் இணைப்பு மற்றும் சுற்றுப்புறங்களுக்கு இடையிலான அணுகலை மேம்படுத்துகிறது.
RTAவின் மூலோபாய இலக்குகள்
நகரம் முழுவதும் பாதுகாப்பான, திறமையான மற்றும் நிலையான போக்குவரத்தை உறுதி செய்வதற்கான பரந்த பணியின் ஒரு பகுதியாக இந்த பாலத் திட்டம் இருப்பதாக RTA கூறுகிறது. இந்த மேம்பாடுகள் துபாயை இயக்கம் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் உலகளாவிய தலைமையாக நிலைநிறுத்துவதற்கான தொலைநோக்குடன் ஒத்துப்போகின்றன.
எதிர்காலத் திட்டங்கள் சமூகங்களின் தேவைகளை சிறப்பாக நிவர்த்தி செய்ய குடியிருப்பாளர் கருத்துக்களை தொடர்ந்து இணைக்கும் என்பதைக் குறிப்பிட்டு, பொது ஈடுபாட்டிற்கான அதன் உறுதிப்பாட்டை RTA வலியுறுத்தியுள்ளது. “இந்தத் திட்டங்கள் எமிரேட்டின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் அன்றாட இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் முன்முயற்சியுடன் கூடிய, நிலையான மற்றும் சமூகத்தை மையமாகக் கொண்ட உள்கட்டமைப்பை வழங்குவதற்கான RTAவின் உத்தியை பிரதிபலிக்கின்றன” என்று RTA தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel