துபாயின் வைரலான பிஸ்தா நிரப்பப்பட்ட சாக்லேட் பார்கள் (pistachio kinda chocolates) துபாய் டூட்டி ஃப்ரீயில் வருவாயை அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது துபாய் டியூட்டி ஃப்ரீயில் இந்த வகையான சாக்லேட்டுகள் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் திர்ஹம்ஸ்க்கும் அதிகமாக வசூலை ஈட்டி வருகின்றன. இது ஏப்ரல் மாதத்தில் மொத்த வணிகத்தில் 4 சதவீதமாகும். இது குறித்து துபாய் டூட்டி ஃப்ரீயின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் சிடாம்பி பேசுகையில், கடந்த மாதத்தில் இந்த சாக்லேட் அனைத்து சாக்லேட் விற்பனையிலும் 40 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில், துபாய் டூட்டி ஃப்ரீ 713 மில்லியன் திர்ஹம்ஸ் விற்பனையை பதிவு செய்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 18 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது. அதில், இந்த வைரலான சாக்லேட் பார் கிட்டத்தட்ட 28 மில்லியன் திர்ஹம்ஸ் வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம் விமான நிலைய சில்லறை விற்பனையாளருக்கு இந்த வருவாய் ஏப்ரல் மாதத்தை நான்காவது சிறந்த மாதமாக நிலைநிறுத்துகிறது.
2021 ஆம் ஆண்டில் முதலில் FIX Dessert Chocolatiers நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிஸ்தாச்சியோ குனாஃபா சாக்லேட் பார் முதலில் சமூக ஊடகங்களில் வைரலாகியது, இப்போது இது DXB இல் கட்டாயம் வாங்க வேண்டிய பொருளாக உருவெடுத்திருக்கிறது. இதனால் தினந்தோறும் மில்லியன் திர்ஹம்சிற்கு இது விற்கப்படுகின்றது.
இதன் காரணமாக துபாய் டூட்டி ஃப்ரீயில், 1 மில்லியன் தினசரி விற்பனையை பூர்த்தி செய்ய குறைந்தது ஐந்து பிராண்டுகள் சாக்லேட் பார்களை வழங்குகின்றன என்று சிடாமி கூறியுள்ளார். இந்த சாக்லேட் பார்கள் வைரலானதை தொடர்ந்து அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சாக்லேட்கள் சமீப காலமாக விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் சுவாரஸ்ய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel