ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் திறந்தவெளி பொழுதுபோக்கு ஈர்ப்புகளுக்குப் பதிலாக குளிர்ச்சியாக உட்புற சுற்றுலா இடங்களுக்கு செல்வதை பெரிதும் நாடுகின்றனர். அதற்காக அமீரகத்தில் பல்வேறு இடங்கள் இருக்கின்றன. அவற்றில், மிகவும் கவர்ச்சிகரமான அருங்காட்சியகங்கள் மற்றும் கலை மையங்களுக்கு இலவச அணுகல் கிடைக்கிறது.
துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள அற்புதமான கண்காட்சிகள் முதல் ஷார்ஜாவில் உள்ள வரலாற்று சேகரிப்புகள் வரை, ஒரு திர்ஹம்ஸ் கூட செலவழிக்காமல், வெயிலில் இருந்து தப்பித்து, உட்புற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய இடங்கள் பற்றிய விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
துபாய்
1. எக்ஸ்போ 2020 துபாய் அருங்காட்சியகம் & கார்டன் இன் தி ஸ்கை
சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் குறிக்கும் வகையில், எக்ஸ்போ சிட்டி துபாய் மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் எக்ஸ்போ 2020 துபாய் அருங்காட்சியகம் மற்றும் கார்டன் இன் தி ஸ்கைக்கு இலவச அணுகலை வழங்குவதாக அறிவித்துள்ளது.
- அருங்காட்சியக நேரம்: காலை 10 மணி–இரவு 8 மணி
- கார்டன் இன் தி ஸ்கை: பிற்பகல் 2–இரவு 10 மணி
மேலும் விரும்புவோருக்கு, 25 திர்ஹம் விலையுள்ள டிக்கெட்டில் டெர்ரா, அலிஃப் மற்றும் விஷன் போன்ற கூடுதல் பெவிலியன்களுக்கு அணுகலை வழங்குகிறது.
2. ஜமீல் ஆர்ட்ஸ் சென்டர்
ஜதஃப் கடற்கரையில் அமைந்துள்ள ஜமீல் ஆர்ட்ஸ் சென்டர் (Jameel Arts Centre) பார்வையாளர்களுக்கு இலவச நுழைவை வழங்குகிறது.
- நேரம்: காலை 10–இரவு 8 மணி (சனி–வியாழன்), மதியம் 12–இரவு 8 மணி (வெள்ளி)
- செவ்வாய் கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.
மேலும், பார்வையாளர்கள் சிறந்த அனுபவத்திற்காக ஆன்லைனில் இலவச வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களையும் முன்பதிவு செய்யலாம்.
3. காஃபி மியூசியம்
அல் ஃபஹிதி சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், காஃபியின் உலகளாவிய பாரம்பரியத்திற்குள் ஒரு பயணத்தை வழங்குகிறது.
- இடம்: வில்லா 44, அல் ஹிஸ்ன் ஸ்ட்ரீட்
- நேரம்: காலை 9–மாலை 5 மணி (சனி–வியாழன்), வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும்
இங்கு காஃபியின் தோற்றம், அதன் நுகர்வுடன் தொடர்புடைய மரபுகள் மற்றும் காபி தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை விவரிக்கும் கண்காட்சிகளை பார்வையாளர்கள் ஆராயலாம். மேலும், காஃபி உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து காய்ச்சும் டெமோக்கள், பழங்கால கருவிகள் மற்றும் கலாச்சாரக் கதைகளை எதிர்பார்க்கலாம்.
4. மிராஜ் இஸ்லாமிக் ஆர்ட் சென்டர் – துபாய்
உம் சுகீமில் உள்ள ஜுமேரா ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள இந்த மையம், எகிப்து, இந்தியா, சிரியா மற்றும் பலவற்றிலிருந்து அரிய இஸ்லாமிய கலைகளைக் கொண்டுள்ளது.
- நேரங்கள்: தினமும், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
அபுதாபி
1. மனாரத் அல் சாதியத் (Manarat Al Saadiyat)
சாதியத் ஐலேண்டின் கல்ச்சுரல் டிஸ்ட்ரிக்டின் (Cultural District) ஒரு பகுதியான இந்த கலை மையத்தில் அபுதாபியின் தலைசிறந்த படைப்புகளுக்கான சேகரிப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
- நேரங்கள்: தினமும், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
- குறிப்பு: 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. நுழைவாயிலில் உங்கள் பெயர் மற்றும் தொடர்புத் தகவலைப் பதிவு செய்தால் போதும்.
2. பாஸ்ஸாம் ஃப்ரீஹா ஆர்ட் ஃபவுண்டேஷன் (Bassam Freiha Art Foundation)
சாதியத் ஐலேன்ட் கல்ச்சுரல் டிஸ்ட்ரிக்டில் அமைந்துள்ள இந்த இடம், பாரம்பரியம் மற்றும் அடையாளத்தைக் கொண்டாடும் சிந்தனைமிக்க கலைப்படைப்புகளின் தொகுப்பை வழங்குகிறது. மேலும், அனைத்து பார்வையாளர்களுக்கும் நுழைவு இலவசம்.
- நேரங்கள்: தினமும், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
3. மிராஜ் இஸ்லாமிக் ஆர்ட் சென்டர்- அபுதாபி
துபாயில் அதன் இருப்பிடத்தைப் போலவே, மெரினா மாலுக்கு அருகிலுள்ள இந்த கிளையிலும் பாரம்பரிய இஸ்லாமிய கலை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கலைப்பொருட்கள் உள்ளன.
- இடம்: வில்லா 14B & 15B, மெரினா அலுவலக பூங்கா
- நேரம்: தினமும், காலை 9:30–மாலை 7 மணி
ஷார்ஜா
1. ஷார்ஜா ஆர்ட்ஸ் மியூசியம்
அல் ஷுவைஹீனின் ஆர்ட்ஸ் ஏரியாவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், பிராந்தியத்தின் சிறந்த கலாச்சார இடங்களில் ஒன்றாகும்.
- நேரம்: காலை 9–இரவு 9 மணி (சனி–வியாழன்), மாலை 4–இரவு 9 மணி (வெள்ளி)
இந்த அருங்காட்சியகத்தில் அப்துல்காதர் அல் ரைஸ் மற்றும் லூவே கயாலி போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் இடம்பெறும் 500க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel