குடும்ப பொழுதுபோக்கு, கலாச்சாரம் மற்றும் ஷாப்பிங்கிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி இலக்கான குளோபல் வில்லேஜ், அதன் 29-வது சீசனில் 10.5 மில்லியன் விருந்தினர்களை ஈர்த்து சாதனை படைத்த எண்ணிக்கையில் நடப்பு சீசனை முடித்துள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுa. இது முந்தைய சீசனில் 10 மில்லியனாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து துபாய் ஹோல்டிங் என்டர்டெயின்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னாண்டோ ஈரோவா (Fernando Eiroa) கூறுகையில், இந்த சாதனை குளோபல் வில்லேஜின் தனித்துவமான ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
மேலும், “உலகம் முழுவதிலுமிருந்து பொழுதுபோக்கு, உணவு மற்றும் சில்லறை விற்பனை மூலம் மக்களை ஒன்றிணைக்கும் உலகத்தரம் வாய்ந்த குடும்ப அனுபவத்தை நாங்கள் வழங்குகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். குளோபல் வில்லேஜின் சீசன் 29 இதுவரை இல்லாத அளவுக்கு விரிவான பொழுதுபோக்கு நிகழ்ச்சியைக் கொண்டிருந்தது, இதில் பின்வருவன அடங்கும்:
- 400க்கும் மேற்பட்ட கலைஞர்களால் 40,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள்
- 30 அரங்குகளில் 90க்கும் மேற்பட்ட கலாச்சாரங்களின் பிரதிநிதித்துவம்
- 3,500க்கும் மேற்பட்ட ஷாப்பிங் அவுட்லெட்டுகள்
- 200க்கும் மேற்பட்ட சவாரிகள் மற்றும் பொழுதுபோக்கு ஈர்ப்பு இடங்கள்
கூடுதலாக, சர்வதேச இசை நிகழ்ச்சிகள் மற்றும் தெரு நிகழ்ச்சிகள் முதல் கலாச்சார காட்சிப்படுத்தல்கள் மற்றும் குடும்ப நட்பு நடவடிக்கைகள் வரை, பூங்கா பார்வையாளர்களுக்கு சீசன் முழுவதும் ஒரு பிரத்யேக அனுபவத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது குளோபல் வில்லேஜ் அதன் அடுத்த மைல்கல்லான 30வது சீசனுக்கு தயாராகி வரும் நிலையில், ஏற்பாட்டாளர்கள் இன்னும் மேம்பட்ட விருந்தினர் அனுபவங்கள் மற்றும் புதுமையான நிகழ்வுகளை வழங்க உறுதியளித்துள்ளனர். சீசன் 29ன் சாதனை படைத்த செயல்திறன் இன்னும் அற்புதமான மைல்கல் ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel