ADVERTISEMENT

UAE: குறிப்பிட்ட வாகனங்கள் அபுதாபி ஐலேண்டிற்குள் செல்ல தற்காலிக தடை விதிப்பு..!!

Published: 14 May 2025, 6:34 PM |
Updated: 14 May 2025, 6:36 PM |
Posted By: Menaka

அபுதாபி எமிரேட்டின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) கனரக வாகனங்கள் மற்றும் தொழிலாளர் பேருந்துகள் அபுதாபி ஐலேண்ட்டிற்குள் நுழைவதற்கு தற்காலிக தடையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி, நாளை (மே 15, வியாழக்கிழமை) மதியம் 12:00 மணி முதல் அடுத்தநாள் (மே 16, வெள்ளிக்கிழமை) மதியம் 2:00 மணி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க ஐக்கிய அரபு அமீரகம் தயாராகி வருவதால் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.அதிபர் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் சர்வதேச சுற்றுப்பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவுக்கு சென்றார், மேலும் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடருவார் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது, அவரது பயணத் திட்டத்தில் ரியாத், தோஹா மற்றும் அபுதாபி ஆகியவை அடங்கும்.

இத்தகைய சூழலில், முக்கிய பகுதிகளில் சீரான போக்குவரத்து ஓட்டத்தையும் மேம்பட்ட பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அதிகாரிகள் பெரும்பாலும் இதுபோன்ற உயர்மட்ட நிகழ்வுகளின் போது போக்குவரத்து கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது வழக்கமான நடைமுறையாகும். அதனடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel