ADVERTISEMENT

பிக் டிக்கெட் டிராவில் 50,000 திர்ஹம்ஸ் வென்ற இந்தியர்: இரண்டாவது முயற்சியிலேயே பரிசை வென்றதால் மகிழ்ச்சி!!

Published: 25 May 2025, 8:20 AM |
Updated: 25 May 2025, 8:20 AM |
Posted By: Menaka

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்திய வெளிநாட்டவர் ஒருவர், பிக் டிக்கெட்டின் வாராந்திர இ-டிராவில் 50,000 திர்ஹம்ஸ் பரிசை வென்றுள்ளதாக பிக் டிக்கெட் நிர்வாகம் அறவித்துள்ளது. அதில் பிரவீன் அருண் டெல்லிஸ் (52 வயது) என்பவர் தனது இரண்டாவது முயற்சியிலேயே இந்த வெற்றியை பெற்றதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

கப்பல் மற்றும் சில்லறை விற்பனைத் துறையில் மேலாளராகப் பணிபுரியும் பிரவீன் அருண் ஒரு சக ஊழியரால் பிக் டிக்கெட் டிராவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஏழு நண்பர்கள் குழுவுடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிக் டிக்கெட் டிராவிற்கான டிக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தனது நண்பர்கள் குழுவுடன் வெற்றிக்கான பரிசுத்தொகையை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும், அவரது பங்கை தனது குடும்பத்தை ஆதரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் பிரவீன் அருண் தெரிவித்துள்ளார். மேலும், பிக் டிக்கெட் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் இந்த வெற்றி நிதி நிவாரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த மே மாத 20 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசுத்தொகைக்கான டிரா வரும் ஜூன் 3 அன்று நடத்தப்படவுள்ளது. கூடுதலாக, வாராந்திர டிராக்களும் நடத்தப்பட்டு அதில் வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ பிக் டிக்கெட் வலைத்தளத்தில் அல்லது சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் அமைந்துள்ள கவுண்டர்களில் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT