ADVERTISEMENT

துபாய்: டிரைவிங் லைசன்ஸ் பெறுவதில் ஆண்களை மிஞ்சும் பெண்கள்… ஒரு ஆண்டில் வழங்கப்பட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைசென்ஸ்..!!

Published: 22 May 2025, 2:27 PM |
Updated: 22 May 2025, 2:29 PM |
Posted By: Menaka

பெண்களின் பாதுகாப்பில் முதன்மையாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்நிலையில் துபாய் எமிரேட்டில் ஆண்களை விட பெண்களே அதிகளவு டிரைவிங் லைசென்ஸ் பெறுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்திய புள்ளிவிபரங்களின் படி, துபாய் பெண் ஓட்டுநர்களின் எண்ணிக்கையில் அதிகளவு உயர்வு காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது எமிரேட் முழுவதும் பரந்த சமூக மற்றும் இயக்க மாற்றங்களை பிரதிபலிக்கிறது.

ADVERTISEMENT

கடந்த 2024 ஆம் ஆண்டில், துபாயில் மட்டும் 105,568 பெண்கள் புதிய ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆண்களுக்கு 6,903 மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும், கடந்த ஆண்டில் மொத்தம் 383,086 புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன என்றும், அவற்றில் 161,704 பெண்களுக்கும் 221,382 ஆண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

KT Graphic: Raja Choudhuryமேலும் அபுதாபியில், 147,334 புதிய உரிமங்கள் வழங்கப்பட்டன, அவற்றில் ஆண்களுக்கு 120,363 மற்றும் பெண்களுக்கு 26,971 ஆகும். ஷார்ஜாவில், வழங்கப்பட்ட 65,195 மொத்த உரிமங்களில் 15,653 பெண்கள் பெற்றனர், அதே நேரத்தில் ஆண்கள் 49,542 பெற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாகனம் ஓட்டுவதை ஒப்பிடுகையில் அமீரகத்தில் ஆண்களை விட பெண்கள் விபத்துக்களில் குறைவாகவே ஈடுபடுகிறார்கள் என்றும், மேலும் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட முனைகிறார்கள் என்றும் RoadSafety UAE-யின் தரவில் தெரிய வந்துள்ளது. அவர்கள் சீட் பெல்ட்களைப் பயன்படுத்துவது உட்பட போக்குவரத்து விதிகளை கடுமையாகப் பின்பற்றுவதுடன், தாறுமாறாக வாகனம் ஓட்டுவதையோ அல்லது வாகனம் ஓட்டும்போது தொலைபேசிகளைப் பயன்படுத்துவதையோ அதிகம் தவிர்க்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. பெண் ஓட்டுநர்களின் இந்த அதிகரிப்பு, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேர்மறையான மாற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT