ADVERTISEMENT

துபாயின் கடும் வெயிலிலும் ‘சில்’ பண்ண 11 சிறந்த பீச்.. முழுவிபரங்களும் இங்கே..!!

Published: 4 May 2025, 9:01 PM |
Updated: 4 May 2025, 9:03 PM |
Posted By: Menaka

அமீரகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், வேலைக்குப் பிறகு ஓய்வெடுக்க அல்லது உங்கள் குடும்பத்துடன் அமைதியான மாலை நேரத்தை குளுகுளுவென அனுபவிக்க விரும்பும் துபாய் குடியிருப்பாளர்களுக்கு கடற்கரை செல்வது சிறந்த தேர்வாக இருக்கும். துபாயில் பல பொது கடற்கரைகள் உள்ளன. இதில் 11 சிறந்த கடற்கரை இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதனை பற்றிய விபரங்களை கீழே காணலாம்.

ADVERTISEMENT

துபாயில் உள்ள சிறந்த பொது கடற்கரைகள்:

1. கைட் பீச் (ஜுமேரா)

புர்ஜ் அல் அரப் காட்சிகளுடன் 2.4 கி.மீ நீளமுள்ள, ஜுமேராவில் உள்ள கைட் பீச்சில் பின்வரும் அனுபவங்களும் வசதிகளும் கிடைக்கும்:

  • கைட் சர்ஃபிங்,
  • ஜாகிங் டிராக்,
  • நீர் விளையாட்டு,
  • குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானங்கள்

குறிப்பாக, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடலில் நீந்தி மகிழ்ந்திருக்கும் வகையில் எளிதான அணுகல் வசதிகளும் உள்ளது.

ADVERTISEMENT

இடம்: காரில் செல்லும் போது, ஜுமேரா பீச் சாலையில் (D94) இருந்து 11A ஸ்ட்ரீட்டில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்

2. ஜுமேரா 1 பீச்

இந்த கடற்கரை குளியலுக்காக முழுமையாக நியமிக்கப்பட்டுள்ளது மற்றும் 1.35 கி.மீ ஜாகிங் டிராக் உள்ளது.

ADVERTISEMENT

இடம்: ஜுமேரா பீச் சாலையில் (D94) அபுதாபி நோக்கி வாகனம் ஓட்டும்போது, ​​துபாய் கேனலை (Dubai canal) கடந்த பிறகு, உங்கள் வலதுபுறத்தில் இந்தக் கடற்கரையைக் காண்பீர்கள்

3. ஜுமேரா 2 பீச் (திறந்த கடற்கரை)

ஜாகிங் டிராக், திறந்தவெளி ஜிம், விளையாட்டு மைதானங்கள், கடற்கரை நூலகம் என பல்வேறு வசதிகளையும் உள்ளடக்கிய இந்த கடற்கரை அனைத்து பார்வையாளர்களுக்கும் எளிதான அணுகலை வழங்குகிறது.

இடம்: ஜுமேரா பீச் சாலையில் (D94) உள்ள மெர்காடோ மாலுக்குப் பிறகு அமைந்துள்ளது.

4. ஜுமேரா 3 பீச்

சுமார் 1,980 மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் கைட் சர்ஃபிங் (kite surfing), உடற்பயிற்சி மண்டலங்கள், ஜாகிங் டிராக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், சூரியன் மறைவை பார்ப்பதற்காக 125 மீட்டர் ‘happiness platform’ என்ற தளம் உள்ளது

இடம்: ஷேக் சையத் சாலையிலிருந்து (E11) உம் அல் ஷேஃப் சாலை வழியாக சென்றால் கடற்கரையை அடையலாம்.

5. உம் சுகீம் 1 மற்றும் 2 பீச்

615 மீட்டர் நீளமுள்ள இந்த இரண்டு கடற்கரைகளிலும் தனித்தனி நீச்சல் மற்றும் சர்ஃபிங் பகுதிகள், ஒரு ஜாகிங் டிராக், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான அணுகல் பாதைகள் உள்ளன.

இடம்: புர்ஜ் அல் அரபிற்கு 1 கிமீ முன், 41A ஸ்ட்ரீட்டில் திரும்பி சென்று கடற்கரைக்குச் செல்லலாம்.

இரவு குளியலுக்கு அனுமதி கொண்ட கடற்கரைகள் (24/7 திறந்திருக்கும்):

துபாய் பின்வரும் 3 கடற்கரைகளில் உயர் ஒளி விளக்குகளுடன் இரவு நேர குளியலை அறிமுகப்படுத்தியது.

  • ஜுமேரா 2 பீச்
  • ஜுமேரா 3 பீச்
  • உம் சுகீம் 1 பீச்

6. அல் மம்சார் கார்னிச் பீச்

இந்த 760 மீட்டர் கடற்கரை குளிப்பவர்களுக்கான பிரபலமான கடற்கரை ஆகும். விளையாட்டு மைதானங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான அணுகல் பகுதிகள் மற்றும் ஒரு கடற்கரை நூலகம் ஆகியவை அடங்கும்.

இடம்: அல் கலீஜ் ஸ்ட்ரீட்டில் (D92), அல் மம்சார் பீச் பார்க்கிற்கு முன் கடற்கரை உள்ளது.

7. அல் மம்சார் லகூன் பீச்

3.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையானது, குளியலுக்கான பகுதி, ஜாகிங் மற்றும் பைக்கிங் டிராக்குகள், ஜிம் உபகரணங்களுடன் உடற்பயிற்சி நிலையங்கள் என பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

இடம்: அல் கலீஜ் ஸ்ட்ரீட்டில் (D92) வாகனம் ஓட்டும்போது, ​​நீங்கள் அல் மம்சார் கார்னிச் கடற்கரையைக் கடந்து, பின்னர் அல் மம்சார் பார்க்கை கடக்க வேண்டும். பின்னர் லகூன் பீச் உங்கள் இடதுபுறத்தில் இருக்கும்

8. அல் சுஃபூ பீச்

புர்ஜ் அல் அரபுக்கும் பாம் ஜுமேராவிற்கும் இடையிலான அமைதியான இந்த கடற்கரையில் ஒரு நடைப்பயணத்தையும் புத்துணர்ச்சியூட்டும் கடல் காற்றையும் அனுபவிக்க முடியும்.

  • இடம்: கிங் சல்மான் ஸ்ட்ரீட் வழியாக சாலை வழியாக அணுகலாம்.
  • மெட்ரோ: துபாய் இன்டர்நெட் சிட்டி அல்லது மஷ்ரெக் நிலையத்தில் இறங்கி, பின்னர் ஒரு டாக்ஸியில் செல்ல வேண்டும்

9. தி பீச், JBR

கடைகள், உணவகங்கள், நீர் விளையாட்டுகளுடன் கூடிய கலகலப்பான குடும்பத்திற்கு ஏற்ற செயல்பாடுகளைக் கொண்ட ஒரு மாவட்டமான JBR இல் உள்ள தி பீச்சில் (The Beach) உடற்பயிற்சி ஆர்வலர்கள் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை அனுபவிக்கலாம்.

இடம்: DMCC அல்லது சோபா ரியாலிட்டி மெட்ரோ நிலையம் அருகில் உள்ளது.

10. துபாய் ஐலேண்ட்ஸ் பீச்

துபாயின் முதல் செல்லப்பிராணி நட்பு கடற்கரை இதுவாகும். செல்லப்பிராணிகளுக்கு ஏற்றது. பூங்காவிலும் கடற்கரையிலும் நாய்கள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், இது கயாக்கிங் மற்றும் பேடில்போர்டிங்கிற்கு சிறந்தது

இடம்: துபாய் ஐலேண்ட்ஸ் பிரிட்ஜ் வழியாக இங்கு அணுகலாம்.

11. பாம் வெஸ்ட் பீச்

பாம் ஜுமேராவில் 1.6 கி.மீ. நடைபாதையுடன் உள்ள கடற்கரையானது, செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற இடமாகும். இங்கு கஃபேக்கள், ஜாகிங் பாதை, கடல் காட்சிகளை வழங்குகிறது.

இடம்: அல் இத்திஹாத் பார்க் நிறுத்தத்திற்கு பாம் மோனோரெயிலில் சென்றடையலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel