ADVERTISEMENT

துபாய்: 3 மாதங்களில் அபராதத்தில் இருந்து மட்டும் 68.4 மில்லியன் திர்ஹம்ஸ் வருவாய்…. லாபம் 33% அதிகரிப்பு.. தகவலை வெளியிட்ட Salik..

Published: 13 May 2025, 9:07 PM |
Updated: 13 May 2025, 9:08 PM |
Posted By: Menaka

துபாயின் பிரத்யேக சுங்கச்சாவடி ஆபரேட்டரான சாலிக் PJSC (Salik PJSC), 2025-ஆம் ஆண்டிற்கான வலுவான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த வருவாயில் 751.6 மில்லியன் திர்ஹம்ஸ் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 33.7% அதிகரிப்பு ஆகும்.

ADVERTISEMENT

புதிய மாறுபட்ட சாலிக் விலைக் கொள்கை, இரண்டு புதிய டோல் கேட் மற்றும் அதிகரித்த அபராத வசூல் ஆகியவற்றால் வருவாயை அதிகரித்திருப்பதாக நிறுவனம் செவ்வாயன்று அறிவித்துள்ளது. அதேசமயம், வரிகளுக்குப் பிந்தைய நிகர லாபமும் இந்த வளர்ச்சியை பிரதிபலித்தது, சுமார் 33.7% அதிகரித்து 370.6 மில்லியன் திர்ஹம்ஸை எட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சாலிக்கின் கட்டணம் வசூலிக்கக்கூடிய பயணங்கள் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 158 மில்லியனாக உயர்ந்தன, இது 2024 நவம்பர் மாத இறுதியில் பிசினஸ் பே மற்றும் அல் சஃபா சவுத்தில் புதிய டோல் கேட்கள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்த சாலை பயன்பாட்டையும், ஜனவரி 31, 2025 அன்று நேர அடிப்படையிலான விலை நிர்ணயத்தைத் தொடர்ந்தும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT
  • உச்ச கால பயணங்கள் (Dh6 டோல்): 39.3 மில்லியன்
  • ஆஃப்-பீக் பயணங்கள் (Dh4 டோல்): 107.5 மில்லியன்
  • இலவச கால பயணங்கள் (1am–6am): 11.2 மில்லியன்

குறிப்பாக, அபராதங்களிலிருந்து வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 16.2% அதிகரித்து 68.4 மில்லியன் திர்ஹம் ஆக உயர்ந்துள்ளது, சுமார் 786,000 மீறல்கள் பதிவாகியுள்ளன. இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 9.1% பங்களித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலிக்கின் துணை வருவாய்கள்

  • எமார் மால்ஸ் (Emaar Malls) மற்றும் பார்கோனிக் (Parkonic) உடனான பார்க்கிங் கூட்டாண்மைகளிலிருந்து வருவாய்: திர்ஹம்2.8 மில்லியன்
  • டேக் செயல்படுத்தல் கட்டணம் 17.4% அதிகரித்து திர்ஹம்11.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இது குறித்து சாலிக் தலைமை நிர்வாக அதிகாரி இப்ராஹிம் சுல்தான் அல் ஹடாட் கூறுகையில், “நாங்கள் 2025 ஆம் ஆண்டில் வலுவான வேகத்துடன் நுழைந்துள்ளோம், எங்கள் முக்கிய டோலிங் வணிகம் தொடர்ந்து செழித்து வருகிறது” என்று கூறியுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “புதிய மாறுபட்ட விலை நிர்ணயத்தைக் கணக்கில் கொண்டு, மொத்த கட்டணம் வசூலிக்கக்கூடிய பயணங்கள் 158 மில்லியனை எட்டின, மொத்த வருவாய் வளர்ச்சி 30 சதவீதத்தைத் தாண்டியது. லாபமும் வலுவானது” என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சாலிக்கின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் மட்டார் அல் தயர், “எங்கள் விதிவிலக்கான காலாண்டு செயல்திறன் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை வழங்குவதில் தொடர்ச்சியான கவனம் செலுத்துவதையும், ஸ்மார்ட், நிலையான இயக்கத்தில் உலகளாவிய தலைமையாக மாறுவதற்கான எங்கள் லட்சியத்தையும் பிரதிபலிக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய மேம்பாடுகள் மற்றும் விரிவாக்கம்

  • துபாய் மாலில் (ஜூலை 1, 2024 முதல்) தடையற்ற பார்க்கிங் அமைப்பு
  • பார்கோனிக் உடனான ஐந்து ஆண்டு கூட்டாண்மை, சாலிக்கின் இ-வாலட்டை ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 107 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைக்கிறது
  • சாலிக் நிறுவன வாடிக்கையாளர்கள் திட்டமிடப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட கார்ப்பரேட் சாலிக் டேக்குகள் (customized salik tag), நிறுவனங்கள் தங்களுக்கான தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் செய்திகளுடன் டோல் டேக்குகளை பிராண்ட் செய்ய அனுமதிக்கிறது

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel