ஷார்ஜா எமிரேட் எக்ஸ்போ கோர் ஃபக்கானில் ‘Mango Festival’ என்ற மாம்பழ விழாவின் நான்காவது பதிப்பினை நடத்தவுள்ளது. வருகின்ற ஜூன் 27 முதல் 29 வரை நடைபெறும் இந்த மாம்பழ விழாவில் பல்வேறு வகையான மாம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. ஷார்ஜா வர்த்தக மற்றும் தொழில்துறை சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள உள்ளூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட பல்வேறு வகையான மாம்பழங்களை காட்சிப்படுத்தும் என்று கூறப்படுகின்றது. மாம்பழ பருவத்தைக் கொண்டாடும் அதே வேளையில் நாட்டின் விவசாயத் துறையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில் விவசாயிகளுக்கான ஒர்க் ஷாப்கள் மற்றும் விவசாயத்தில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான போட்டிகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூறுகையில் ஷார்ஜா சேம்பரின் அரசு உறவுகள் இயக்குநர் கலீல் அல் மன்சூரி, நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் வளர்க்கப்படும் பொருட்களின் சந்தை இருப்பை அதிகரிப்பதிலும் இந்த விழாவின் பங்கை எடுத்துரைத்துள்ளார். இதில் உள்ளூர் மற்றும் சர்வதேச பகுதிகளின் மாம்பழ வகைகளை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம், அவற்றுள்:
- ஏமன் மாம்பழம் – ஒரு கிலோவிற்கு 10 திர்ஹம்ஸ்
- அல்போன்சா மாம்பழம் – ஒரு பெட்டிக்கு 35–45 திர்ஹம்ஸ்
- பெருவியன் மாம்பழம் – ஒரு கிலோ 35 திர்ஹம்ஸ் அல்லது ஒரு பெட்டிக்கு 90–110 திர்ஹம்ஸ்
- கொலம்பிய மினி மாம்பழம் – ஒரு பெட்டி 90–100 திர்ஹம்ஸ்
கம்போடியன் & சீன மாம்பழம் – ஒரு கிலோ 18 திர்ஹம்ஸ் போன்றவை இடம்பெறும்.
இது குறித்து கோர் ஃபக்கான் நகராட்சி மன்ற உறுப்பினர் முகமது கல்ஃபான் அல்நக்பி பேசுகையில், இந்த நிகழ்வில் உள்ளூர் விவசாயிகள் மற்றும் நிபுணர்களின் பரந்த பங்கேற்பு, குடும்பங்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் கல்வி நடவடிக்கைகள் ஆகியவை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். வலுவான அரசாங்க ஆதரவு மற்றும் சமூக ஈடுபாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த ஆண்டு மாம்பழ விழா அதிக கூட்டத்தை ஈர்க்கும் என்றும், விவசாய சிறப்பிற்கான மையமாக ஷார்ஜாவின் நிலையை மேலும் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel