துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெள்ளிக்கிழமை, மே 30 முதல் செவ்வாய், ஜூன் 3 வரை இரண்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என்று அறிவித்துள்ளது. RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சாலை மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இன்று (மே 30) அதிகாலை 1 மணிக்குத் தொடங்கி ஜூன் 3 அன்று அதிகாலை 5 மணி வரை ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட் மற்றும் அல் மினா ஸ்ட்ரீட் சந்திப்பில் இந்த தாமதங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, வாகன ஓட்டுநர்கள் முன்கூட்டியே திட்டமிடவும், திசை அடையாளங்களைப் பின்பற்றவும், பாதிக்கப்பட்ட பகுதியில் நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்படி வாகன ஓட்டிகளுக்கு RTA ஆல் பரிந்துரைக்கப்பட்ட மாற்றுச் சாலைகளில் பின்வரும் சாலைகள் அடங்கும். அவை,
- ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா ஸ்ட்ரீட்
- ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட்
- ஜுமேரா ஸ்ட்ரீட்
- குவைத் ஸ்ட்ரீட்
- செகண்ட் டிசம்பர் ஸ்ட்ரீட்
எனவே, சாலை பராமரிப்பு காலத்தில் சீரான பயணத்தை உறுதிசெய்ய, அனைத்து வாகன ஓட்டுநர்களும் சாலை நிலைமைகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்கவும், போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவும் RTA பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel