ADVERTISEMENT

துபாயில் வரவிருக்கும் 80 மாடிகளுடன் உலகின் உயரமான வெளிப்புற நீச்சல் குளம் கொண்ட ‘Trump Tower’..

Published: 2 May 2025, 4:42 PM |
Updated: 2 May 2025, 4:42 PM |
Posted By: Menaka

உயரமான கட்டிடங்களுக்கும் நவீன கட்டிடக்கலைக்கும் பெயர் போன துபாயில் மற்றுமொரு உயரமான புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. துபாயின் முக்கிய கட்டிடங்களில் ஒன்றாக இடம்பிடிக்க துபாயில் முதல் டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் & டவர் (Trump International Hotel & Tower) வரவிருக்கிறது. இது  டவுன்டவுன் துபாயில் உள்ள ஷேக் சையத் சாலையில் 80 மாடிகள் கொண்டு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த கட்டிடம் புர்ஜ் கலீஃபா மற்றும் அரபிக் கடலின் பிரம்மிப்பூட்டும் காட்சிகளை வழங்கும் என்றும், டிரம்ப் உறுப்பினர்களுக்கு மட்டுமேயான தனியார் கிளப் இதில் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பெரிய திட்டம் சொகுசு ரியல் எஸ்டேட் டெவலப்பரான டார் குளோபல் (Dar Global) மற்றும் தி டிரம்ப் ஆர்கனைசேஷன் (The Trump Organisation) இடையேயான கூட்டாண்மை ஆகும். சவுதி அரேபியாவில் ட்ரம்ப் டவர் ஜெத்தா மற்றும் ஓமானில் ட்ரம்ப் இன்டர்நேஷனல் கோல்ப் கிளப் அண்ட் ஹோட்டல் போன்ற திட்டங்களின் முன்னேற்றங்களைத் தொடர்ந்து, இது அவர்களின் ஐந்தாவது கூட்டுத் திட்டமாகும்.Look: 80-floor Trump Tower to rise in Downtown Dubai, feature world's highest outdoor pool

கோபுரத்தின் அம்சங்கள்

சுமார் 350 மீட்டர் உயரத்தில் 80 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில், துபாய் வானின் அற்புதமான காட்சிகளை வழங்கும் வகையில் தரையிலிருந்து உச்சி வரை ஜன்னல்களுடன் வடிவமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, பின்வரும் வசதிகள் மற்றும் அம்சங்களைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அவை:

ADVERTISEMENT

– சொகுசு வீடுகள் மற்றும் ஹோட்டல்
– பிரத்தியேக அணுகலுடன் உறுப்பினர்களுக்கு மட்டுமேயான டிரம்ப் கிளப்
– நியூயார்க்கின் டிரம்ப் டவரில் இருப்பது போன்று தனியார் ஸ்கை பூல்களுடன் இரண்டு வானுயர் பென்ட்ஹவுஸ்கள்
– உலகின் மிக உயரமான வெளிப்புற நீச்சல் குளம்
– குடியிருப்பாளர்களுக்கான ரிசார்ட் பாணியிலான நீச்சல்குளம்
– தனியார் ஓய்வறைகள், தனிப்பயனாக்கப்பட்ட சேவை மற்றும் அதிக ஆடம்பர வசதிகள்

Look: 80-floor Trump Tower to rise in Downtown Dubai, feature world's highest outdoor poolஇது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் பேசுகையில், துபாய் அதன் உலகளாவிய ஈர்ப்பு மற்றும் ஆடம்பரத்திற்கான புகழ் பெற்றதன் காரணமாக இந்த கட்டிடத்திற்கு துபாய் சரியான இடம் என்று கூறியுள்ளார். மேலும், டார் குளோபலின் தலைமை நிர்வாக அதிகாரி ஜியாத் எல் சார், துபாயின் வலுவான பொருளாதாரம் உயர்நிலை ரியல் எஸ்டேட்டைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக அமைகிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel