ADVERTISEMENT

துபாய்: UAE எக்ஸ்சேஞ்ச் மெட்ரோ நிலையத்தின் பெயர் மாற்றம்..!! புதிய பெயரை அறிவித்த RTA!!

Published: 5 May 2025, 8:26 PM |
Updated: 5 May 2025, 8:33 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் மெட்ரோவின் புதிய பெயரிடும் ஒப்பந்தத்தின் கீழ், UAE எக்ஸ்சேஞ்ச் மெட்ரோ நிலையத்திற்கு, லைஃப் பார்மசி மெட்ரோ நிலையம் (Life Pharmacy) என மறுபெயரிடப்படும் என்று அறிவித்துள்ளது. லைஃப் பார்மசி குழுமம் மற்றும் ஹைப்பர்மீடியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ADVERTISEMENT

RTA உடனான சலுகை ஒப்பந்தத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சலுகையாளரான மடா மீடியாவும் கையொப்பமிடலில் பங்கேற்றதாகக் கூறப்படுகின்றது. ஜெபல் அலியில் அமைந்துள்ள இந்த நிலையம், ரெட் லைனில் தொடக்கப் புள்ளிகளில் ஒன்றாக செயல்படுகிறது. இது கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் R42 என பெயரிடப்பட்டுள்ளது.

Dubai: UAE Exchange Metro station to be renamed as Life Pharmacy

ADVERTISEMENT

லைஃப் பார்மசிக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு பெயரிடும் உரிமை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த நிலையம் முழு மறுபெயரிடலுக்கு உட்படுகிறது. இதனை தொடர்ந்து நிலையம் முழுவதும் பலகைகள் மற்றும் அமைப்புகளில் மாற்றங்கள் மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை தொடரும் என்று RTA உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் RTA வெளியிட்ட அறிவிப்பின் படி, அனைத்து உள் மற்றும் வெளிப்புற திசை அடையாளங்கள் (directional signage), டிஜிட்டல் வரைபடங்கள், பொது போக்குவரத்து பயன்பாடுகள் மற்றும் உள் ஆடியோ அறிவிப்புகள் புதிய நிலையப் பெயரைப் பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2009 இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட துபாய் மெட்ரோ பெயரிடும் உரிமைகள் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த திட்டம் பிராண்டுகள் மற்றும் நிறுவனங்கள் மெட்ரோ நிலையங்களுக்கு பெயரிடும் உரிமைகளைப் பெற அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

பல ஆண்டுகளாக, இந்த முயற்சியின் ஒரு பகுதியாக பல மெட்ரோ நிலையங்களும் மறுபெயரிடப்பட்டுள்ளன. சமீபத்திய மாற்றங்களில் GGICO நிலையம் அல் கர்ஹூத் நிலையம் என மறுபெயரிடப்பட்டது, அல் கைல் நிலையம் அல் ஃபர்தான் எக்ஸ்சேஞ்ச் என மறுபெயரிடப்பட்டது ஆகியவை அடங்கும். JLT, உம் ஷீஃப், மஷ்ரெக், மெரினா மற்றும் அல் சஃபா ஆகியவை மறுபெயரிடப்பட்ட பிற நிலையங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel