ஐக்கிய அரபு அமீரகம் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் தனது மதிப்புமிக்க கோல்டன் விசா திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது, இது பரந்த அளவிலான தொழில் வல்லுநர்கள், படைப்பாளிகள் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள நபர்களுக்கு நீண்டகால ரெசிடென்சியை வழங்கும் புதிய வகைகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த நடவடிக்கை, நாட்டில் சிறந்த திறமைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், புதுமை, கல்வி, சுகாதாரம், ஊடகம் மற்றும் ஆடம்பரத் தொழில்களுக்கான உலகளாவிய மையமாக தன்னை நிலைநிறுத்துவதற்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூலோபாய உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
புதிய கோல்டன் விசா வகைகள்:
- செவிலியர்கள்
மே 12 அன்று சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடும் வகையில், துபாய் ஹெல்த்தில் குறைந்தது 15 ஆண்டுகள் பணியாற்றிய செவிலியர்களுக்கு புதிய கோல்டன் விசா வகையை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது. துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் கீழ், தொடங்கப்பட்ட இந்த புதிய விசா, சுகாதார அமைப்பில் செவிலியர்களின் முக்கிய பங்கையும் சமூக நல்வாழ்வுக்கு அவர்களின் பங்களிப்பையும் அங்கீகரிக்கிறது.
2. சிறந்த கல்வியாளர்களுக்கான கோல்டன் விசா
துபாய்
கல்வித் துறையில், துபாயில் உள்ள தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் குழந்தை பருவ மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இப்போது கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இது அக்டோபர் 2024 இல் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையத்தால் (KHDA) தொடங்கப்பட்டது. கல்வித் தரத்தை உயர்த்துவதில் அவர்களின் சாதனைகள் மற்றும் தாக்கத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஸ்பான்சர் செய்யலாம்.
ராஸ் அல் கைமா
ராஸ் அல் கைமா அறிவுத் துறை (RAK DOK) துபாயைப் போலவே, எமிரேட்டில் உள்ள தனியார் பள்ளி கல்வியாளர்களுக்கான முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில், ஆசிரியர்கள், துறைத் தலைவர்கள், முதல்வர்கள் மற்றும் பள்ளி இயக்குநர்கள் விசாவுக்கு தகுதியுடையவர்கள். இந்த முயற்சி மூலம், ராஸ் அல் கைமா எமிரேட் உயர்மட்ட கல்வி நிபுணர்களுக்கு வெகுமதி அளித்து தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது.
3. டிஜிட்டல் காண்டென்ட் கிரியேட்டர்ஸ்
திரைப்பட தயாரிப்பாளர்கள், சோஷியல் மீடியா இன்ப்ளூஎன்ஸர்ஸ் மற்றும் டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்ஸ் உள்ளிட்ட படைப்பாளர்கள், ‘Creators HQ’ ஆல் நிர்வகிக்கப்படும் திட்டத்தின் கீழ் இப்போது 10 ஆண்டு கோல்டன் விசாவைப் பெறலாம். இந்த முயற்சி ஜனவரியில் ‘1 Billion Followers Summit’ நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. இந்த விசா, படைப்பாளிகள் ஸ்பான்சர் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது. விண்ணப்பதாரர்கள் Creators HQ தளம் மூலம் தங்கள் கோரிக்கைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
4. இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங் நிபுணர்கள்
துபாய், கேமிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் துறையில் நிபுணர்களுக்கான ஒரு விசா வகையையும் சேர்த்துள்ளது. துபாய் கேமிங் திட்டம் 2033 (DPG33) இன் ஒரு பகுதியாக, 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் துபாய் கலாச்சாரத்தின் (Dubai Culture) சான்றிதழ் (accreditaion certificate) பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். இந்த நடவடிக்கை துபாயின் இ-ஸ்போர்ட்ஸ்க்கான உலகளாவிய மையமாக மாறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும். அபுதாபி அதன் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் இதே போன்ற முயற்சிகளை ஆதரிக்கிறது.
5. தனியார் சொகுசு படகு உரிமையாளர்கள்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Abu Dhabi Golden Quay’ முயற்சியின் கீழ், ஆடம்பர படகு உரிமையாளர்கள் (luxury yacht owners) மற்றும் கடல்சார் துறையில் முக்கிய பங்குதாரர்கள் இப்போது கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். DCT அபுதாபி, யாஸ் மெரினா மற்றும் அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் ஆபீஸ் தலைமையிலான இந்த திட்டம் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
இதற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் குறைந்தது 40 மீட்டர் நீளமுள்ள ஒரு யாச் (yacht) வைத்திருக்க வேண்டும். யாச்ட் தொடர்பான சேவைகளில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் இந்த விசா கிடைக்கும். இந்த பிரிவின் கீழ் குடும்ப ஸ்பான்சர்ஷிப் அனுமதிக்கப்படுகிறது.
இந்த புதிய விசா விருப்பங்கள், உலகளாவிய திறமைகளை ஈர்ப்பதற்கும், புதுமைகளை ஊக்குவிப்பதற்கும், அதன் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதற்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel