ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூன் 2025க்கான எரிபொருள் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மே மாதத்துடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை, அதேசமயம் டீசல் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. புதிய எரிபொருள் விலைகள் நாளை (ஜூன் 1) முதல் அமலுக்கு வரும். இந்த விலைப்பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
- சூப்பர் 98 பெட்ரோல்: லிட்டருக்கு 2.58 திர்ஹம் (மாற்றம் இல்லை)
- ஸ்பெஷல் 95 பெட்ரோல்: லிட்டருக்கு 2.47 திர்ஹம் (மாற்றம் இல்லை)
- இ-பிளஸ் 91 பெட்ரோல்: லிட்டருக்கு 2.39 திர்ஹம் (மாற்றம் இல்லை)
- டீசல்: லிட்டருக்கு 2.45 திர்ஹம் (மே மாதத்தில் 2.52 திர்ஹம்சாக இருந்தது)
உலகளாவிய எண்ணெய் சந்தை போக்குகளுக்கு ஏற்ப ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் விலைகள் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு நாடு எரிபொருள் விலைகளை ஒழுங்குபடுத்தியதிலிருந்து இந்த விலை நிர்ணயக் கொள்கை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel