ADVERTISEMENT

அமீரகத்தில் 177,000க்கும் மேற்பட்ட பாதசாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம்.. காரணம் என்ன..??

Published: 21 May 2025, 9:04 PM |
Updated: 21 May 2025, 9:04 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதிகாரிகள் பாதசாரிகள் புரியும் விதிமீறல்களின் அதிகரித்து வரும் போக்கு குறித்து கவலைகளை எழுப்புகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் சாலைகளைக் கடப்பதன் மூலம் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வருவதாகவும், மேலும் பல சந்தர்ப்பங்களில், அவர்களின் மொபைல் போன்களே இதற்குக் காரணம் என்றும் ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 195,000 க்கும் மேற்பட்ட பாதசாரி விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இது நாட்டின் வேகமாக நகரமயமாக்கப்படும் பகுதிகளில் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவாலை எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிக்னல்கள் அல்லது எதிரே வரும் வாகனங்களை அறியாமல், சாலைகளைக் கடக்கும்போது தங்கள் தொலைபேசிகளைப் பார்க்கும் பாதசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். சிலர் ஜங்ஷன்களில் கவனம் இல்லாமல் சமூக ஊடகங்களை தொடர்ந்து உபயோகிக்கிறார்கள், இதனால் பாதசாரி விளக்குகள் சிவப்பு நிறமாக மாறும்போது கவனிக்கத் தவறிவிடுகிறார்கள் என்றும் புகாரளிக்கின்றனர்.

ADVERTISEMENT

அமைச்சகத்தின் தரவுகளின்படி, சாலைகளில் குறிப்பிடப்படாத இடங்களில் சாலைகளைக் கடந்ததற்காக சுமார் 177,554 மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பாதசாரி சிக்னல்களைப் புறக்கணித்ததற்காக 18,073 மீறல்கள் வழங்கப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான விதிமீறல்களில் அபுதாபி முன்னிலை வகிக்கிறது:

  • அபுதாபி: 109,260 Jaywalking, 13,043 சிக்னல் மீறல்கள்
  • துபாய்: 35,233 Jaywalking, 4,990 சிக்னல் மீறல்கள்
  • அஜ்மான்: 30,228 Jaywalking, 11 சிக்னல் மீறல்கள்
  • ஷார்ஜா: 2,044 Jaywalking, 23 சிக்னல் மீறல்கள்
  • ஃபுஜைரா: 772 Jaywalking, 6 சிக்னல் மீறல்கள்
  • உம் அல் குவைன்: 17 Jaywalking

சட்ட அபராதங்கள் மற்றும் புதிய விதிமுறைகள்

தற்போதைய சட்டங்கள் தவறான இடத்தில் சாலைகளைக் கடப்பதற்கு அல்லது பாதசாரி சிக்னல்களைப் புறக்கணிப்பதற்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கின்றன. இருப்பினும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரக  போக்குவரத்துச் சட்டம் இத்தகைய அலட்சியம் விபத்துகளுக்கு வழிவகுக்கும் போது தண்டனைகளை கணிசமாக அதிகரிக்கிறது. அதனடிப்படையில், குறிப்பிடப்படாத பகுதிகளிலிருந்து சாலையைக் கடக்கும் எந்தவொரு நபரும், போக்குவரத்து விபத்தை ஏற்படுத்தினால், சிறைத்தண்டனை மற்றும் 5,000 திர்ஹம் முதல் 10,000 திர்ஹம்களுக்கு மேல் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளில் ஏதேனும் ஒன்று விதிக்கப்படும் என கூறியுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, பாதசாரிகள் 80 கிமீ/மணிக்கு மேல் வேக வரம்புகளைக் கொண்ட சாலைகளைக் கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் செயல்கள் விபத்துகளுக்கு பங்களித்தால் அவர்கள் சிவில் அல்லது கிரிமினல் பொறுப்பை ஏற்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரக்தியை வெளிப்படுத்தும் ஓட்டுநர்கள்

பாதசாரிகளின் ஆபத்தான நடத்தை குறித்து ஓட்டுநர்களும் தங்களின் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பெரும்பாலான ஓட்டுனர்கள், “பாதசாரிகள் அவர்களுக்கான வழி பயன்படுத்த உரிமை உண்டு, அவர்களுக்காக நாங்கள் நிறுத்த வேண்டும். ஆனால் சிலர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை, அவர்கள் மெதுவாக நடக்கிறார்கள், நடக்கும் போது தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள், அல்லது சிவப்பு விளக்கின் போது கடக்கிறார்கள். அது பொறுப்பற்றது மட்டுமல்ல. இது ஓட்டுநர்களுக்கும் நியாயமற்றது” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

எனவே பாதசாரிகள் நியமிக்கப்பட்ட கிராசிங்குகளைப் பயன்படுத்துமாறும், விழிப்புடன் இருக்குமாறும், குறிப்பாக அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளுக்கு அருகில் கவனச்சிதறல்களைத் தவிர்க்குமாறும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், சாலைப் பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்த விரிவாக்கப்பட்ட பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அவர்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும், இன்றைய வேகமான, தொலைபேசி மோகம் கொண்ட உலகில், பாதுகாப்பாக இருப்பது என்பது உங்களுக்காகவும் சாலையை பயன்படுத்தும் மற்றவர்களுக்காகவும், சாலையில் கவனம் செலுத்துவது மற்றும் விதிகளை மதிப்பது என்பதாகும் என்று போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதும் குறிப்படத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel