ADVERTISEMENT

அமீரக வேலைவாய்ப்பு: 7,500 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ரிசார்ட்..!!

Published: 5 May 2025, 10:51 AM |
Updated: 5 May 2025, 11:01 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அமீரகத்தின் முதல் ஒருங்கிணைந்த கேமிங் ரிசார்ட்டான ‘வின் அல் மர்ஜன் தீவு (Wynn Al Marjan Island)’ 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதன் பிரமாண்டமான திறப்புக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இங்கு புதிதாக ஆட்களை பணியமர்த்துவதற்கான செயல்முறையை வின் அல் மர்ஜன் நிர்வாகம் சமீபத்தில் தொடங்கியது.

ADVERTISEMENT

ராஸ் அல் கைமாவில் தற்போது கட்டுமானத்தில் உள்ள வின் அல் மர்ஜான் (wynn al Marjan), பல்வேறு துறைகளில் 7,500 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வின் ரிசார்ட்ஸின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து நிறுவனத்தின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி மைக்கேல் வீவர் கூறுகையில், தற்போது சுமார் 80 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 300 ஆக அதிகரிக்கும். ஹோட்டல் ஊழியர்கள், உணவக ஊழியர்கள் போன்ற பணிகளுக்கான பெரும்பாலான ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, மார்ச் 2027 இல் ரிசார்ட் திறக்க திட்டமிடப்பட்டுள்ள ஆறு மாதங்களுக்கு முன்பே செப்டம்பர் 2026 இல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். ரிசார்ட்டின் அதிகாரப்பூர்வ தொழில் பக்கத்தில் வேலை தொடர்பான கீழ்கண்ட பதவிகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை,

ADVERTISEMENT

– தொழில்நுட்ப செயல்பாடுகளின் நிர்வாக இயக்குநர் (executive director of technical operation)
– கொள்முதல் ஆய்வாளர் (procurement analyst)
– ஐடி பயன்பாட்டு ஆதரவு ஆய்வாளர் (IT application support analyst)
– இழப்பீடு மற்றும் சலுகைகள் மேலாளர் (compensation and benefits manager)
– ஒப்பந்த சேவைகள் நிர்வாகி (contract services administrator)
– ஒப்பந்த சேவைகள் மேலாளர் (contract services manager)
– திறமை கையகப்படுத்தல் ஆட்சேர்ப்பு செய்பவர் (talent acquisition recruiter)

மேலும், இந்த ரிசார்ட்டின் கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும், 70 தளங்களில் 45 தளங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், தினமும் சுமார் 10,000 தொழிலாளர்கள் தளத்தில் செயல்படுவதாகவும், கட்டி முடிக்கப்பட்டதும், இந்த ரிசார்ட் வின் ரிசார்ட்ஸ் நிறுவன போர்ட்ஃபோலியோவில் மிக உயரமானதாகவும், குழுவில் உள்ள முதல் பீச் ரிசார்ட்டாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

வின் அல் மர்ஜான் ரிசார்ட்டானது மர்ஜான் மற்றும் RAK ஹாஸ்பிடாலிட்டி ஹோல்டிங் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு வருகிறது, மேலும் அமீரகத்தின் பொது வணிக கேமிங் ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து (GCGRA) வணிக கேமிங் உரிமத்தைப் பெற்ற முதல் இடமாகவும் இது இருக்கும்.

இந்த ரிசார்ட்டில் 1,500 அறைகள், 22 உணவகங்கள், ஒரு ஸ்பா, மற்றும் கேமிங்கிற்கான (gaming) பிரத்யேக இடம் இருக்கும். இங்கு விருந்தோம்பல் துறையில் மட்டுமல்லாமல், IT, நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் பல துறைகளிலும் பணிபுரியலாம். அத்துடன் இந்த இடமானது அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களையும், குறிப்பாக இந்தியா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் மத்திய ஐரோப்பாவிலிருந்து சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் என்று வீவர் குறிப்பிட்டுள்ளார்.

வின் அல் மர்ஜான் திறப்பு ராஸ் அல் கைமாவின் சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தைகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ராஸ் அல் கைமா இலக்கை நிர்ணயித்துள்ளது. தற்போது இது 8,000 ஹோட்டல் அறைகளைக் கொண்டுள்ளது மற்றும் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய அதை குறைந்தது 16,000 ஆக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel