ADVERTISEMENT

UAE: போக்குவரத்து அபராதங்களில் தள்ளுபடி அறிவிப்பு: சரியான நேரத்தில் அபராதம் செலுத்த காவல்துறை அறிவுரை..!!

Published: 26 Jun 2025, 8:34 PM |
Updated: 26 Jun 2025, 8:34 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகனம் வைத்திருப்பது எளிதான விசயம் என்றாலும், அதனை அமீரக சாலைகளில் இயக்குவது மிகவும் சவாலானது. ஏனெனில் சாலையில் திடீரென பாதையை மாற்றுவது முதல் ரெட் சிக்னலை கடப்பது வரை எண்ணற்ற விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு அபுதாபியில் விதிக்கப்படும் போக்குவரத்து அபராதங்களை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டலை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அபராதம் விதிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் அபராதங்களை செலுத்தினால் ஓட்டுநர்கள் 35% வரை தள்ளுபடி பெறலாம், அதன் பிறகு செலுத்துபவர்கள் 25% தள்ளுபடி பெறலாம். எவ்வாறாயினும், கடுமையான மீறல்கள் காரணமாக வழங்கப்படும் அபராதங்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

“Take the Initiative and Benefit” பிரச்சாரத்தின் ஒரு பகுதியான இந்த முயற்சி சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதையும் ஓட்டுநர்கள் மீதான நிதிச் சுமைகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விரைவான மற்றும் வசதியான கட்டணங்களுக்காக அபுதாபி காவல்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப்  உள்ளிட்ட டிஜிட்டல் சேனல்களைப் பயன்படுத்த குடியிருப்பாளர்களை அதிகாரிகள் ஊக்குவிக்கின்றனர்.

ADVERTISEMENT

போக்குவரத்து மீறல்களைக் குறைத்தல் மற்றும் சமூக உறுப்பினர்கள் சட்டப்பூர்வமாக இணங்க உதவுதல் என்ற பரந்த இலக்கையும் இந்த பிரச்சாரம் ஆதரிக்கிறது என்று அபுதாபி எமிரேட்டின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ரோந்து இயக்குநரகத்தின் இயக்குனர் பிரிகேடியர் மஹ்மூத் யூசெப் அல் பலுஷி அவர்கள் கூறியுள்ளார்.

எனவே வாகன ஓட்டுநர்கள் அபராதங்கள் குவிய விடாமல் இருக்கவும், தங்கள் பதிவுகளைப் பராமரிக்கவும், இதுபோன்ற தள்ளுபடிகளை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் சரியான நேரத்தில் அபராதத்தை செலுத்தி பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel