எதிர்கால வானளாவிய கட்டிடங்கள் ஆதிக்கம் செலுத்தும் நவீன துபாயின் மையத்தில், ஒரு எளிய மரப் படகு துபாய் க்ரீக் முழுவதும் பயணிகளை ஏற்றிச் செல்கிறது. அப்ரா என்றழைக்கப்படும் பாரம்பரிய மரப்படகு துபாயின் பழமையான பொதுப் போக்குவரத்து முறையாகும், இது நகரத்தின் பாரம்பரியத்தின் நீடித்த அடையாளமாக உள்ளது. மேலும் ஒரு பயணத்திற்கு 1 திர்ஹம்ஸ் மட்டுமே செலவாகும். இது இன்னும் பழமையான துபாயை ஆராய மிகவும் மலிவு மற்றும் அழகான வழிகளில் ஒன்றாகும்.
இந்தப் படகுகள் நீண்ட காலமாக தேரா மற்றும் பர் துபாயின் பரபரப்பான சுற்றுப்புறங்களை இணைத்து, தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் முதல் ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் வரை அனைவரையும் ஏற்றி செல்கின்றன. சமீபத்தில், துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் அவர்களும் நகரத்தின் பழைய சூக்குகளில் ஒன்றைப் பார்வையிட அப்ராவில் சவாரி செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பாரம்பரிய அப்ரா சவாரி
தேராவிற்கும் பர் துபாய்க்கும் இடையில் ஓடும் 14 கிலோமீட்டர் நீளமுள்ள துபாய் க்ரீக்கில் பாரம்பரிய அப்ராக்கள் இயங்குகின்றன. படகுகள் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் இயக்கப்படுகின்றன, இது கிரீக்கைக் கடக்க விரைவான மற்றும் அழகிய வழியாக அமைகிறது.
முக்கிய வழிகள் மற்றும் நேரங்கள்:
1. தேரா ஓல்டு சூக் ↔ பர் துபாய் அப்ரா நிலையம்
- ஸ்பைஸ் சூக் மற்றும் டெக்ஸ்டைல் சூக் அருகே அமைந்துள்ளது
- நேரங்கள்: காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை
2. அல் சப்கா ↔ துபாய் ஓல்டு சூக்
- பனியாஸ் ஸ்கொயர் மற்றும் பாரம்பரிய சந்தைகளுக்கு (traditional markets) அருகில் உள்ளது
- நேரங்கள்: 24 மணி நேரமும்
நீங்கள் பாரம்பரிய பகுதிகள், பாரம்பரிய சந்தைகள் அல்லது வரலாற்று மசூதிகளைப் பார்வையிடுகிறீர்கள் என்றால் இவை சிறந்த வழிகள் ஆகும்.
பெட்ரோல் ஹெரிட்டேஜ் அப்ரா (2 திர்ஹம்ஸ்)
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பெட்ரோல் ஹெரிட்டேஜ் அப்ராக்களையும் வழங்குகிறது. பாரம்பரிய படகுகளின் நவீன பதிப்புகளாக இருக்கும் இந்த அப்ராக்களில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது. இந்த வழிகள் அல் ஃபஹிதி வரலாற்று சுற்றுப்புறம் (Al fahidi historical neighbourhoods), சூக்குகள் மற்றும் கடற்கரை மசூதிகள் போன்ற இடங்களைக் கண்டறிய உங்களை அனுமதிக்கின்றன.
பெட்ரோல் அப்ரா வழித்தடங்கள் மற்றும் நேரங்கள்:
CR3 – துபாய் ஓல்டு சூக் முதல் பனியாஸ் வரை
- திங்கள் முதல் வியாழன் வரை: காலை 7:30 – இரவு 11:30 மணி
- வெள்ளி: காலை 8 – இரவு 11:25 மணி
- சனிக்கிழமை: காலை 8 – இரவு 11:40 மணி
- ஞாயிற்றுக்கிழமை: காலை 10 – இரவு 11:40 மணி
CR4 – அல் ஃபஹிதி முதல் அல் சப்கா வரை
- திங்கள் முதல் வியாழன் வரை: காலை 8 – இரவு 11:25 மணி
- வெள்ளி: காலை 8 – இரவு 11:30 மணி
- சனி: காலை 8 – இரவு 11:50 மணி
- ஞாயிறு: காலை 10 – இரவு 11:25 மணி
CR5 – அல் ஃபஹிதி முதல் தேரா ஓல்டு சூக் வரை
- திங்கள் முதல் வியாழன் வரை: காலை 8:30 – இரவு 11:25 மணி
- வெள்ளி: காலை 8:30 – இரவு 11:20 மணி
- சனி: காலை 9 மணி – இரவு 12 மணி
- ஞாயிறு: காலை 9 மணி – இரவு 11:30 மணி
CR6 – அல் சீஃப் முதல் பனியாஸ் வரை
- திங்கள் முதல் வியாழன் வரை: காலை 8 மணி – இரவு 11:25 மணி
- வெள்ளி: காலை 8 மணி – இரவு 11:20 மணி
- சனி: காலை 10 மணி – இரவு 11:45 மணி
- ஞாயிறு: காலை 10 மணி – இரவு 11:25 மணி
அப்ரா நிலையங்களை எவ்வாறு அடைவது?
மெட்ரோ மூலம்:
- கிரீன் லைனில் சென்று sharaf DG அல்லது அல் குபைபா நிலையங்களில் இறங்கவும்.
- 10 நிமிட நடைப்பயணம் மேற்கொண்டால் அருகிலுள்ள அப்ரா நிலையத்திற்கு செல்லலாம்.
பேருந்து மூலம்:
- பர் துபாய்: வழித்தடங்கள் 29, C10, மற்றும் 33
- தேரா: வழித்தடங்கள் C09 மற்றும் C28
நீங்கள் நகரத்தின் கலாச்சார இடங்களை ஆராயும் சுற்றுலாப் பயணியாக இருந்தாலும் சரி அல்லது பயணத்தை அனுபவிக்கும் குடியிருப்பாளராக இருந்தாலும் சரி, துபாயை சுற்றிப்பார்க்க மலிவான வழி அப்ராவில் சவாரி செய்வதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel