துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) கோடைக்கால சீசனில் பயணிக்கும் பயணிகளுக்கு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக, ஜூன் 10 முதல் 30 வரை பார்க்கிங் கட்டணங்களில் தள்ளுபடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பரபரப்பான பருவத்தில் பயணிகளுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்குகிறது. இந்த புதிய கட்டணங்கள் டெர்மினல் 1 கார் பார்க்கிங் B, டெர்மினல் 2 மற்றும் டெர்மினல் 3 இல் கிடைக்கின்றன. நீங்கள் செலுத்த வேண்டிய கட்டண விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* 3 நாட்கள்: 100 திர்ஹம்ஸ்
* 7 நாட்கள்: 200 திர்ஹம்ஸ்
* 14 நாட்கள் (2 வாரங்கள்): 300 திர்ஹம்ஸ்
வழக்கமான பார்க்கிங் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது இந்த கட்டணங்கள் குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்குகின்றன.
துபாய் விமான நிலையத்தில் வழக்கமான பார்க்கிங் கட்டணம்
டெர்மினல் 1 பார்க்கிங் கட்டணம்
கார் பார்க்கிங் A
- 5 நிமிடங்கள் – 5 திர்ஹம்ஸ்
- 15 நிமிடங்கள் – 15 திர்ஹம்ஸ்
- 30 நிமிடங்கள் – 30 திர்ஹம்ஸ்
- 2 மணி நேரம் வரை – 40 திர்ஹம்ஸ்
- 3 மணி நேரம் – 55 திர்ஹம்ஸ்
- 4 மணி நேரம் – 65 திர்ஹம்ஸ்
- 1 நாள் – 125 திர்ஹம்ஸ்
- ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் – 100 திர்ஹம்ஸ்
கார் பார்க்கிங் B
- 1 மணி நேரம் – 25 திர்ஹம்ஸ்
- 2 மணி நேரம் – 30 திர்ஹம்ஸ்
- 3 மணி நேரம் – 35 திர்ஹம்ஸ்
- 4 மணி நேரம் – 45 திர்ஹம்ஸ்
- 1 நாள் – 85 திர்ஹம்ஸ்
- ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் – 75 திர்ஹம்ஸ்
டெர்மினல் 2
கார் பார்க்கிங் A
- 1 மணி நேரம் – 30 திர்ஹம்ஸ்
- 2 மணி நேரம் – 40 திர்ஹம்ஸ்
- 3 மணி நேரம் – 55 திர்ஹம்ஸ்
- 4 மணி நேரம் – 65 திர்ஹம்ஸ்
- 1 நாள் – 125 திர்ஹம்ஸ்
- ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் – 100 திர்ஹம்ஸ்
கார் பார்க்கிங் B
- 1 மணி நேரம் – 15 திர்ஹம்ஸ்
- 2 மணி நேரம் – 20 திர்ஹம்ஸ்
- 3 மணி நேரம் – 25 திர்ஹம்ஸ்
- 4 மணி நேரம் – 30 திர்ஹம்ஸ்
- 1 நாள் – 70 திர்ஹம்ஸ்
- ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் – 50 திர்ஹம்ஸ்
டெர்மினல் 3
- 5 நிமிடங்கள் – 5 திர்ஹம்ஸ்
- 15 நிமிடங்கள் – 15 திர்ஹம்ஸ்
- 30 நிமிடங்கள் – 30 திர்ஹம்ஸ்
- 2 மணிநேரம் வரை – 40 திர்ஹம்ஸ்
- 3 மணிநேரம் – 55 திர்ஹம்ஸ்
- 4 மணிநேரம் – 65 திர்ஹம்ஸ்
- 1 நாள் – 125 திர்ஹம்ஸ்
- ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் – 100 திர்ஹம்ஸ்
இது ஒருபுறமிருக்க துபாய் மையமாக கொண்டு இயங்கும் ஃப்ளை துபாய் விமான நிறுவனம், அதன் பயணிகளுக்கு பார்க்கிங் தொந்தரவுகளைத் தவிர்க்க உதவும் வகையில், டெர்மினல் 2 இல் முன்பதிவு செய்யப்பட்ட பார்க்கிங்கை வழங்குகிறது. மேலும் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான DXB 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 23.4 மில்லியன் பயணிகளை வரவேற்றுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 1.5% அதிகமாகும். ஜனவரி மாதம் DXB வரலாற்றில் அதிகபட்ச மாதாந்திர போக்குவரத்தான 8.5 மில்லியன் பயணிகளுடன் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னணி நாடுகள்:
இந்தியா 3 மில்லியன் பயணிகளுடன் DXB-யின் முதன்மையான இலக்கு நாடாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா (1.9 மில்லியன்), இங்கிலாந்து (1.5 மில்லியன்), பாகிஸ்தான் (1 மில்லியன்), அமெரிக்கா (804,000) மற்றும் ஜெர்மனி (738,000) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நகரங்களைப் பொறுத்தவரை, லண்டன் 935,000 பயணிகளுடன் முன்னிலை வகித்தது, அதைத் தொடர்ந்து ரியாத் (759,000), ஜித்தா (627,000), மும்பை (615,000) மற்றும் புது தில்லி (564,000) ஆகியவை உள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel