ADVERTISEMENT

ஈத் அல் அதா-2025: இலவச பார்க்கிங், மெட்ரோ, பேருந்து நேரங்களை அறிவித்த துபாய்!!

Published: 2 Jun 2025, 7:26 PM |
Updated: 2 Jun 2025, 7:26 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜூன் 5 முதல் 8ஆம் தேதி வரை நகரம் முழுவதும் பொது பார்க்கிங் இடங்களை இலவசமாக அணுகலாம் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த விடுமுறை நாட்களில் மல்ட்டி-லெவல் பார்க்கிங் டெர்மினல்களில் வழக்கம் போல கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், விடுமுறைக்கான பொது போக்குவரத்து நேரங்களையும் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

பொது போக்குவரத்து நேரங்கள்

மெட்ரோ மற்றும் டிராம்:

துபாய் மெட்ரோ ஜூன் 4, புதன்கிழமை முதல் ஜூன் 7, சனிக்கிழமை வரை அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை (அடுத்த நாள்) செயல்படும்.
அதே காலகட்டத்தில், துபாய் டிராம் காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை (அடுத்த நாள்) இயங்கும்.

பேருந்துகள்:

புதுப்பிக்கப்பட்ட பேருந்து நேரங்களை சரிபார்க்க குடியிருப்பாளர்கள் S’hail அப்ளிகேஷனை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ADVERTISEMENT
  • அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து E100 வழித்தடம் ஜூன் 4 முதல் 8 வரை இடைநிறுத்தப்படும். எனவே, இந்த காலகட்டத்தில் பயணிகள் இபின் பட்டுடா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபிக்கு E101 வழித்தடத்தைப் பயன்படுத்தலாம்.
  • வழித்தடம் E102 அல் ஜாஃபிலியா பஸ் நிலையத்திலிருந்து இபின் பட்டுடா மற்றும் முசாஃபாவைத் தவிர்த்து, சையத் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடியாக இயக்கப்படும்.

வாடிக்கையாளர் சேவை மற்றும் சோதனை மையங்கள்

விடுமுறை நாட்களில் RTA வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மூடப்படும். இருப்பினும், உம் ரமூல், தேரா, அல் பர்ஷா மற்றும் RTA தலைமை அலுவலகத்தில் உள்ள ஸ்மார்ட் மையங்கள் 24/7 திறந்திருக்கும்.

சேவை வழங்குநர் மையங்கள்:

ஜூன் 5 முதல் 7 வரை இந்த மையங்கள் மூடப்படும். மேலும், பின்வரும் தொழில்நுட்ப சோதனை சேவைகள் ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கும்:

ADVERTISEMENT
  • தஸ்ஜீல் அல் தவார்
  • ஆட்டோப்ரோ அல் மன்கூல்
  • தஸ்ஜீல் அல் அவீர்
  • அல் யலாயிஸ்
  • ஷாமில் முஹைஸ்னா

ஈத் விடுமுறைக்குப் பின்னர், அனைத்து பரிவர்த்தனைகள் மற்றும் சோதனைகள் உட்பட முழு சேவைகளும் ஜூன் 9, 2025 திங்கட்கிழமை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel