துபாயின் போக்குவரத்து பயணத்தில் ஒரு பெரிய புதிய அத்தியாயமாக துபாய் மெட்ரோவின் புதிய வழித்தடத்திற்கான வேலை தொடங்கியுள்ளது. அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், துபாய் மெட்ரோவின் ‘Blue Line’ எனப்படும் நீலப் பாதைக்கு அதிகாரப்பூர்வமாக அடிக்கல் நாட்டியுள்ளார், இது நகரத்தின் லட்சிய ஸ்மார்ட் மொபிலிட்டி திட்டங்களில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
இது தொடர்பாக X தளத்தில் ஷேக் முகமது வெளியிட்ட ஒரு பதிவில், இந்த திட்டத்தை எதிர்கால கட்டிடக்கலை சின்னமாக விவரித்ததுடன், உலகில் வாழ சிறந்த நகரமாக மாறுவதற்கான துபாயின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட விபரங்களின் படி, மொத்தம் 56 பில்லியன் திர்ஹம்ஸ் முதலீட்டில் வரவிருக்கும் ப்ளூ லைன் திட்டம் 30 கிலோமீட்டர் நீளமுள்ளதாக இருக்கும், இது ஒட்டுமொத்த மெட்ரோ நெட்வொர்க்கை 131 கிமீ மற்றும் 78 நிலையங்களாக அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
ப்ளூ லைனின் சிறப்பு அம்சங்கள்:
துபாய் க்ரீக் பகுதியில் முதல் மெட்ரோ பாலம்: ப்ளூ லைன் 1.3 கிமீ நீளமான பாலம் வழியாக துபாய் க்ரீக்கைக் கடக்கும். இது நகரத்தின் மெட்ரோ அமைப்பிற்கான முதல் வழித்தடத்தை அமைக்கும்.
முக்கிய பரிமாற்ற மையங்கள் (Interchange hubs): இந்தப் பாதை மூன்று முக்கிய பரிமாற்ற நிலையங்கள் வழியாக தற்போதுள்ள மெட்ரோ வழித்தடங்களை இணைக்கிறது:
- அல் ஜதாஃப் (கிரீன் லைன்)
- அல் ரஷிதியா (ரெட் லைன்)
- இன்டர்நேஷனல் சிட்டி 1
வழித்தடம் மற்றும் இணைப்பு:
ப்ளூ லைனில் 15.5 கிமீ நிலத்தடியிலும் மற்றும் 14.5 கிமீ உயர்மட்டத்திலும் மெட்ரோ இயங்கும். இதில் 14 நிலையங்கள் இருக்கும். இது துபாய் சர்வதேச விமான நிலையத்தை பின்வரும் முக்கிய பகுதிகளுடன் நேரடியாக இணைக்கும்:
- மிர்திஃப்
- அல் வர்கா
- இன்டர்நேஷனல் சிட்டி 1 மற்றும் 2
- துபாய் சிலிக்கான் ஒயாசிஸ்
- அகாடெமிக் சிட்டி
- ராஸ் அல் கோர் இண்டஸ்ட்ரியல் ஏரியா
- துபாய் க்ரீக் ஹார்பர்
- துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி
இந்த பாதை கிரீன் மற்று ரெட் லைன்களுக்கு இடையே ஒரு முக்கிய இணைப்பாகவும் செயல்படும், நகரம் முழுவதும் அணுகலை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைத்தன்மை மற்றும் வடிவமைப்பு:
ப்ளூ லைன் என்பது பிளாட்டினம் அளவிலான பசுமை கட்டிட சான்றிதழைப் பெற்ற துபாயின் முதல் மெட்ரோ திட்டமாகும். ஒவ்வொரு நிலையமும் பின்வருவனவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது:
- இயற்கை விளக்கு வடிவமைப்புகள்
- பிரீமியம் பொருட்கள்
- அணுகல் அம்சங்கள்
- பேருந்துகள், டாக்ஸிகள், பைக்குகள் மற்றும் இ-ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக மண்டலங்கள்
முதன்முதலாக, 2009 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, ரெட், க்ரீன் மற்றும் ரூட் 2020 வழித்தடங்களை உள்ளடக்கிய துபாய் மெட்ரோ, 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கொண்டு சென்றுள்ளது, சராசரியாக தினசரி 900,000 பயணிகளைக் கொண்டுள்ளது. 14 புதிய நிலையங்கள் மற்றும் 168 ரயில்களுடன், ப்ளூ லைன் துபாய் மெட்ரோவின் இடத்தை உலகின் மிகவும் திறமையான மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில் ப்ளூ லைன் என்பது ஒரு புதிய பாதை மட்டுமல்லாமல், இது எதிர்காலத்தின் ஒரு தொலைநோக்குப் பார்வை, எமிரேட் முழுவதும் மக்கள், சமூகங்கள் மற்றும் புதுமைகளை இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel