துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), ஜூன் 22, 2025 முதல் அரேபியன் ராஞ்சஸ் ஜங்ஷன் தற்காலிக போக்குவரத்து மாற்றத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஐந்து மாதங்களுக்கு நீடிக்கும் இந்த மாற்றம், போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் அல் குத்ரா சாலையில் பாலத்தின் கட்டுமானத்தை மேற்கொள்வதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
RTA-வின் கூற்றுப்படி, முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு:
- அரேபியன் ராஞ்சஸ் மற்றும் துபாய் ஸ்டுடியோ நகரத்தை இணைக்கும் அல் குத்ரா சாலை இன்டர்செக்ஷனில் உள்ள போக்குவரத்து சிக்னலை அகற்றுதல்
- ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் இடையே சீரான இயக்கத்தை அனுமதிக்க இண்டர்செக்ஷன் பகுதிக்கு வெளியே போக்குவரத்தை மாற்றுதல்
- சிறந்த போக்குவரத்து சுழற்சிக்காக இரண்டு புதிய சிக்னல் இல்லாத U-டர்ன்களை அறிமுகப்படுத்துதல்
எனவே, வாகன ஓட்டிகள் முன்கூட்டியே திட்டமிடவும், சீக்கிரமாக வீட்டிலிருந்து வெளியேறவும், நெரிசல் நேரங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் மாற்றுப்பாதை காலத்தில் தொந்தரவு இல்லாத பயணத்தை உறுதிசெய்ய முடியும் என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel