வெள்ளிக்கிழமை இரவு துபாய் மெரினாவில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, துபாய் மெரினா நிலையம் (எண். 5) மற்றும் பாம் ஜுமேரா நிலையம் (எண். 9) இடையேயான துபாய் டிராம் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சனிக்கிழமை அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அப்பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், பயணிகளுக்கு உதவ பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கு இடையே மாற்று பேருந்து சேவைகள் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மண்டலத்திற்கு வெளியே மீதமுள்ள பாதை முழுவதும் டிராம் நெட்வொர்க் செயல்பாட்டில் உள்ளது. டிராக்குகள் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியவுடன் இடைநிறுத்தப்பட்ட பகுதி மீண்டும் திறக்கப்படும் என்பதையும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel