ADVERTISEMENT

துபாயில் ஈத் அல் அதா கொண்டாட்டம்: கார், ஷாப்பிங் வவுச்சர்கள், விமான டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பு…

Published: 5 Jun 2025, 7:00 PM |
Updated: 5 Jun 2025, 7:01 PM |
Posted By: Menaka

துபாயில் தொழிலாளர்களுக்கென பிரத்யேகமாக ஈத் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகார பொது இயக்குநரகத்தால் (GDRFA துபாய்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஈத் அல் அதா கொண்டாட்டங்களில் பங்கேற்க துபாயில் உள்ள தொழிலாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்த நிகழ்வில் கார்கள், தங்கக் கட்டிகள், மொபைல் போன்கள், ஷாப்பிங் வவுச்சர்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் உட்பட சுமார் 500,000 திர்ஹம் மதிப்புள்ள பரிசுகளுடன் கூடிய குலுக்கல்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், வெற்றியாளர்கள் அனைவரும் பங்கேற்பதை எளிதாக்கும் வகையில் தொழிலாளர் பகுதிகளில் உள்ள அவர்களின் தங்குமிடங்களில் நேரடியாக தங்கள் பரிசுகளைப் பெறுவார்கள் என்று GDRFA தெரிவித்துள்ளது. “Let’s Celebrate Eid Together” என்ற கருப்பொருளின் கீழ், நடைபெறும் இரண்டு நாள் நிகழ்வு துபாயின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையுடன் ஒருங்கிணைந்து, ஈத் பண்டிகையின் முதல் நாள் காலையில் கூட்டு ஈத் தொழுகையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

GDRFA வெளியிட்ட அறிக்கையின் படி, மதியம் 1 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில், நேரடி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளம் ஆகியவை அடங்கும், அங்கு தொழிலாளர்கள் மின்னணு ரேஃபிள்களில் சேர்ந்து தங்கள் தொலைபேசி எண்ணைப் பதிவுசெய்த பிறகு உடனடி பரிசுகளை வெல்லலாம் என்றும் GDRFA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், இந்த கொண்டாட்டத்தில், பன்முக கலாச்சார குழுக்களின் நேரடி கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெறும், இது தொழிலாளர்களை பண்டிகை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சூழ்நிலையில் ஒன்றிணைக்கும். இந்த ஆண்டு 25,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை எதிர்பார்ப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை du, Malabar Gold & Diamonds, Al Fattan, flydubai, மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம், துபாய் காவல்துறை, Dewa, துபாய் நகராட்சி, சிவில் பாதுகாப்பு மற்றும் துபாய் ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் ஆதரிக்கின்றன.

UAE ​​முழுவதும் ஈத் கொண்டாட்டங்கள்

மேற்கூறியவற்றுடன் கூடுதலாக அமீரகம் முழுவதும் 10 இடங்களில் தொழிலாளர்களுக்கான கொண்டாட்டங்களும் நடைபெறும். இந்த கூட்டங்களில் ‘Eid with our workers: Joy and happiness’ என்ற கருப்பொருளின் கீழ் போட்டிகள், பரிசுகள் மற்றும் வேடிக்கையான விளையாட்டு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். இந்த முயற்சி, ஈத் விடுமுறை நாட்களில் சமூக உணர்வையும், தொழிலாளர்களை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel