ADVERTISEMENT

துபாயின் மிகப்பெரிய விசா மோசடி வழக்கு: 21 குற்றவாளிகளுக்கு 25 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் விதித்த நீதிமன்றம்!!

Published: 24 Jun 2025, 7:29 PM |
Updated: 24 Jun 2025, 7:29 PM |
Posted By: Menaka

துபாயின் மிகப்பெரிய விசா மோசடி வழக்குகளில் ஒன்றில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு துபாய் குடியுரிமை மற்றும் வதிவிட நீதிமன்றம் (Citizenship and Residency Court) 25.21 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரெசிடென்சி விசாக்களில் மக்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்தக் குழு போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால், விசாக்களைப் பெற்ற பிறகு, அவர்களின் நிலையை சட்டப்பூர்வமாக்க உதவாமல் நிறுவனங்களை மூடிவிட்டனர்.

ADVERTISEMENT

துபாயின் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) இந்த மோசடியைக் கண்டுபிடித்து பொது வழக்குரைஞர் அலுவலகத்திற்குத் தகவல் அளித்துள்ளது. விரிவான கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனங்களுக்கு உண்மையான அலுவலகங்கள் இல்லை என்றும், சட்டவிரோதமாக விசாக்களைப் பெறுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மூத்த அட்வகேட் ஜெனரலும் குடியுரிமை மற்றும் ரெசிடென்ஸ் வழக்குரைஞர் பிரிவின் தலைவருமான டாக்டர் அலி ஹுமைத் பின் காதெம் கூறுகையில், விசாரணையில் தவறான முகவரிகளைப் பயன்படுத்தி 385 விசாக்களை வழங்கிய 33 போலி நிறுவனங்கள் அடங்கும் என்று வெளிப்படுத்தியுள்ளார்.

அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்ட பிறகு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் 21 நபர்களையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சமூகத்தையும் வேலைச் சந்தையையும் பாதுகாக்க, குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று டாக்டர் பின் காதெம் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel