ADVERTISEMENT

இடைநிறுத்தத்திற்கு பின் முழு திறனில் இயங்கும் துபாய் ஏர்போர்ட்.. விமான நிறுவனங்கள் தெரிவித்தது என்ன..??

Published: 24 Jun 2025, 1:52 PM |
Updated: 24 Jun 2025, 1:53 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ், மத்திய கிழக்கில் சில பிராந்தியங்கள் வான்வெளி கட்டுப்பாடுகளை செயல்படுத்தியதைத் தொடர்ந்து  ஜூன் 23 திங்கள் மற்றும் ஜூன் 24 செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்ட பல விமானங்களை மாற்று வழியில் இயக்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன் வேகமாக மாறிவரும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பு அதன் முன்னுரிமையாக இருப்பதாகவும் எதிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், சில தாமதங்கள் மற்றும் இடையூறுகள் வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும், [etihad.com](https://www.etihad.com) இல் விமான புதுப்பிப்புகளை தொடர்ந்து சரிபார்க்குமாறும் பயணிகளுக்கு விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக விமான நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “எதிஹாட் ஏர்வேஸ் விமானங்கள் அங்கீகரிக்கப்பட்ட வான்வெளி வழியாக மட்டுமே இயங்குகின்றன. பாதுகாப்பு எப்போதும் எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமை, அவ்வாறு செய்வது பாதுகாப்பானதாக இல்லாவிட்டால் நாங்கள் ஒருபோதும் விமானத்தை இயக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்த பிராந்திய பதட்டங்கள் மற்றும் வான்வெளி மூடல்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதற்கிடையில், விஸ் ஏர் அபுதாபி (wyzz air abudhabi) அதே வான்வெளி கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டி, ஜூன் 30 வரை ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. வான்வெளி மூடல்கள் காரணமாக திங்கள்கிழமை மாலை பல விமானங்கள் திருப்பி விடப்பட்டதையும் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. “எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது,” என்று அறிக்கையில் கூறிய விஸ் ஏர் அபுதாபி, நிலவரங்கள் பயணிகளுக்குத் தெரியப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், துபாய் விமான நிலையங்கள் ஒரு குறுகிய இடைநிறுத்தத்திற்குப் பிறகு செயல்பாடுகள் முழு திறனில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பெரும்பாலான விமானங்கள் இப்போது திட்டமிட்டபடி இயங்கினாலும், சில தாமதங்கள் அல்லது ரத்துசெய்தல்கள் இன்னும் ஏற்படக்கூடும் என்பதால், சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களுடன் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நேரத்தில் பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் பாதுகாப்பு மீதான தங்கள் உறுதிப்பாட்டையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT


இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel