ஷார்ஜா குடியிருப்பாளர்கள் ஈத் அல் அதா விடுமுறை நாட்களில் மூன்று நாட்களுக்கு பொது பார்க்கிங் இடங்களை இலவசமாக அணுகலாம். இது தொடர்பாக ஷார்ஜா முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூன் 6, வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 8, ஞாயிற்றுக்கிழமை வரை பார்க்கிங் இலவசம் என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விலக்கு சில பகுதிகளுக்குப் பொருந்தாது. அதாவது, அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்கள் உட்பட வாரம் முழுவதும் செயல்படக்கூடிய நீல நிற தகவல் பலகைகளால் குறிக்கப்பட்ட கட்டண பார்க்கிங் இடங்களில் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படும். இந்த மண்டலங்கள் ஏழு நாள் கட்டண அட்டவணையைப் பின்பற்றுகின்றன.
எனவே நீங்கள் விடுமுறை நாட்களில் ஷார்ஜாவில் வாகனங்களை பார்க்கிங் செய்தால், அந்த இடத்தில் பார்க்கிங் கட்டணம் பொருந்துமா என்பதை அறிய நீல நிற அடையாளங்களைப் பார்ப்பது முக்கியமாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel