இஸ்லாமிய புத்தாண்டான ஹிஜ்ரி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, வருகின்ற ஜூன் 27, வெள்ளிக்கிழமை நகரம் முழுவதும் பொது பார்க்கிங் இலவசம் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. இருப்பினும் மல்டி லெவல் வாகன நிறுத்துமிடங்களுக்கு இந்த கட்டண விலக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. RTA வெளியிட்ட அறிக்கையின் படி, வழக்கமான பார்க்கிங் கட்டணம் ஜூன் 28, சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்.
பொது போக்குவரத்து நேரங்கள்:
- துபாய் மெட்ரோ: ஜூன் 27,வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி ஜூன் 28, சனிக்கிழமை வரை
- துபாய் டிராம்: ஜூன் 27 காலை 6 மணி முதல் அதிகாலை 1 மணி (ஜூன் 28) வரை
சேவை மைய நேரங்கள்:
- துபாயில் உள்ள அனைத்து வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களும் வெள்ளிக்கிழமை மூடப்படும். இருப்பினும், உம் ரமூல், தேரா, அல் பர்ஷா மற்றும் RTA தலைமை அலுவலகத்தில் உள்ள ஸ்மார்ட் மையங்கள் 24/7 திறந்திருக்கும்.
- சேவை வழங்குநர் மையங்கள் மற்றும் வாகன சோதனை மையங்களும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டு சனிக்கிழமை மீண்டும் சேவைகளைத் தொடங்கும்.
பேருந்துகள் மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து அட்டவணைகளைக்கு S’hail அல்லது RTA செயலிகளைப் பயன்படுத்துமாறு RTA பயணிகளுக்கு அறிவுறுத்துகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel