ADVERTISEMENT

துபாய் சம்மர் சர்ப்ரைஸ் 2025: 5 மில்லியன் திர்ஹம் பரிசு, சொகுசு கார்கள், தங்கம் வெல்லும் வாய்ப்பு!!

Published: 20 Jun 2025, 6:04 PM |
Updated: 20 Jun 2025, 6:04 PM |
Posted By: Menaka

அமீரகக் குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஒன்றான துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) மிகப்பெரிய வெகுமதிகள், அற்புதமான சலுகைகள் மற்றும் நகர அளவிலான கொண்டாட்டங்களுடன் மீண்டும் வந்துள்ளது. சமீபத்திய அறிக்கைகளின் படி, ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெறும் இந்த ஆண்டு பதிப்பு, முன்பை விட அதிகமான பரிசுகள், அனுபவங்கள் மற்றும் தள்ளுபடிகளை உறுதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

மிகப்பெரிய பரிசுகள் மற்றும் வாராந்திர வெற்றியாளர்கள்

மிகப்பெரிய விற்பனை நிகழ்வில் ஷாப்பிங் செய்பவர்கள் பின்வரும் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆகஸ்ட் 31 அன்று அறிவிக்கப்படும் 5 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள கிராண்ட் பரிசு
  • ஆடம்பர கார்கள்
  • 30 தங்க நாணயங்கள் (தலா 12 கிராம்)
  • எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல சாதனங்கள்

“12 கிராம் எடையுள்ள 30 தங்க நாணயங்களை வழங்க துபாய் தங்கம் மற்றும் நகைக் குழுமத்துடன் நாங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம். எனவே ஒவ்வொரு வாரமும், மூன்று வெற்றியாளர்களை அறிவிப்போம்.” என்று ராஃபிள்ஸ் மற்றும் சில்லறை விற்பனை ப்ரோமோஷன்களின் (Raffles and Retail Promotions) AVP அப்தல்லா அல் அமீரி கூறியுள்ளார். கடந்த ஆண்டு, DSS 10 மில்லியன் திர்ஹம் பரிசுகளை வழங்கியது. இந்த ஆண்டு, அந்த எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது, இது துபாயின் வரலாற்றில் மிகவும் பலனளிக்கும் ஷாப்பிங் விழாக்களில் ஒன்றாகும். ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, முதல் முறையாக, DSS மூன்று கருப்பொருள் கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும். அவை:

ADVERTISEMENT

1. ‘Summer Holiday Offers’ (ஜூன் 27 – ஜூலை 17)
பிரத்யேக ஷாப்பிங் மற்றும் பயண ஒப்பந்தங்களுடன் சீசனுடன் துவங்கும்.

2. ‘The Great Dubai Summer Sale’ (ஜூலை 18 – ஆகஸ்ட் 7)
இது சிறந்த பிராண்டுகளில் 90% வரை தள்ளுபடிகள் கொண்ட விழாவின் சிறப்பம்சமாக இருக்கும்.

ADVERTISEMENT

இந்த கட்டத்தில் பின்வருவன அடங்கும்:

  • 1 திர்ஹம்ஸ் மில்லியன் ரொக்கப் பரிசு
  • ஆடம்பர கார் பரிசு
  • கூடுதல் தினசரி மற்றும் வாராந்திர பரிசுகள்

3. ‘Back to School’ (ஆகஸ்ட் 8 – ஆகஸ்ட் 31)
புதிய கல்வியாண்டிற்கு சரியான நேரத்தில் குடும்பங்கள் பள்ளி கட்டண ஆதரவு, உதவித்தொகைகள் மற்றும் பொருட்களை வெல்லலாம்.

DSS 2025, ராஃபிள்கள் மற்றும் விற்பனைகளுக்கு அப்பால், நேரடி இசை நிகழ்ச்சிகள், பிரத்தியேக உணவு சலுகைகள், குடும்பத்திற்கு ஏற்ற நிகழ்வுகள், துபாயின் சிறந்த மால்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் தனித்துவமான அனுபவங்கள் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பதிப்பை ஏற்பாட்டாளர்கள் கூற்றுப்படி, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்கமுடியாத கோடை அனுபவங்களையும் இந்த சீசன் வழங்கும் என கூறப்படுகின்றது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel