ADVERTISEMENT

துபாய்: 5 மணி நேரத்திற்கும் மேலாக உணவு, தண்ணீர், AC இல்லை.. விமானத்திற்குள் சிக்கித் தவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள்..!!

Published: 16 Jun 2025, 10:38 AM |
Updated: 16 Jun 2025, 10:50 AM |
Posted By: Menaka

கடந்த ஜூன் 13 அன்று துபாயிலிருந்து ஜெய்ப்பூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக உணவு, தண்ணீர் மற்றும் சரியான காற்றோட்டம் இல்லாமல் விமானத்திற்குள் சிக்கித் தவித்த சம்பவம் ஒன்று பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது பயணிகளிடையே ஆத்திரத்தையும் அலட்சியக் குற்றச்சாட்டுகளையும் தூண்டியுள்ளது.

ADVERTISEMENT

துபாயிலிருந்து கடந்த ஜூன் 13 ஆம் தேதி இரவு 7.25 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சரியான நேரத்தில் புறப்பட முடியவில்லை. இருப்பினும், அந்த நேரத்தில் விமானத்தில் இருந்து பயணிகளை இறக்குவதற்கு பதிலாக, விமானத்தில் வெப்பநிலை உயர்ந்தபோதும், 150 க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்திற்குள் உட்கார வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பயணிகளில் ஒருவரான இந்திய உணவியல் நிபுணரும் செல்வாக்கு மிக்கவருமான அர்சூ சேத்தி என்பவர், விமானத்தில் இருந்த பயணிகள் வியர்வையில் நனைந்து, பாதுகாப்பு அட்டைகளுடன் தங்களைத் தாங்களே துடைத்துக்கொள்வதைக் காட்டும் ஒரு வீடியோவை சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார். “எனது மூன்று வயது மகன் வியர்வையில் நனைந்திருந்தான்… எங்களுக்கு உதவ ஒரு உதவியாளர் கூட வரவில்லை,” என்று அவர் தனது பதிவில் கூறினார், இந்த அனுபவத்தை கொடூரமானது என்றும் விவரித்திருந்தார்.

ADVERTISEMENT

மற்றொரு பயணியான ரவி குமார், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், ஏர் கண்டிஷனிங் வேலை செய்யவில்லை, மேலும் உதவிக்கான பலமுறை அழைத்த போதும் யாரும் பதிலளிக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானம் இறுதியில் நள்ளிரவு 12.44 மணிக்கு புறப்பட்டு, ஜூன் 14 அன்று அதிகாலை 2.44 மணிக்கு ஜெய்ப்பூரில் தரையிறங்கியதாகக் கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பல பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி, விமான நிறுவனத்திடம் இருந்து பொறுப்பேற்கக் கோரியுள்ளனர். இதற்குப் பதிலளித்த விமான நிறுவனம், பிராந்தியத்தின் சில பகுதிகளில் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டதால் ஏற்பட்ட விமானப் போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகக் கூறியது. மேலும், வைரலான வீடியோவை ஒப்புக்கொண்டாலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர் கண்டிஷனிங் செயல்பாட்டில் இருந்தது, ஆனால் துபாயின் கடுமையான வெப்பத்தில் நீண்ட நேரம் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டதன் காரணமாக AC பயனற்றதாக உணர்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், “விமானத்தில் இருந்தபோது அழைப்பு மணிகள் உட்பட பயணிகளின் கோரிக்கைகளுக்கு கேபின் குழுவினர் பதிலளித்தனர்,” என்று விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது: “எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், மேலும் எங்கள் பயணிகளின் புரிதலை மனதாரப் பாராட்டுகிறோம்” என்றும் தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel