வெப்பத்திலிருந்து ஓய்வு அளிக்கும் விதமாக, இந்த கோடையில் முதல் முறையாக அமீரகம் ஆலங்கட்டி மழையை அனுபவித்துள்ளது. அதாவது அல் அய்னின் சில பகுதிகளில் சனிக்கிழமை மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. அல் அய்னின் காத்ம் அல் ஷக்லா மற்றும் மலாக்கிட் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அல் அய்னில் உள்ள மலாக்கிட் (Malaqit) பகுதியில் சனிக்கிழமை மாலை லேசானது முதல் மிதமான மழை பெய்ததாகவும், காத்ம் அல் ஷிக்லாவில் (Khatm Al Shiklah) அதிக மழை பெய்ததாகவும் அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. நேற்றைய தினம், இந்தப் பகுதிகளில் வானிலை தீவிரமடைந்ததால், பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு NCM ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.
View this post on Instagram
NCM வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், இந்த வார இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் குடியிருப்பாளர்கள் அதிக மழையை எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை, சனிக்கிழமை, அல் அய்னில் உள்ள ஸ்வீஹானில் அதிகபட்ச வெப்பநிலை 49.2°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை ஜபெல் அல் ஹெபன் (புஜைரா) மற்றும் பராகா 2 (அல் தஃப்ரா பிராந்தியம்) ஆகியவற்றில் 24.6°C ஆகவும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel