ADVERTISEMENT

துபாயில் ஈத் விடுமுறை நாட்களில் சாலிக் கட்டணங்கள் அமலில் இருக்கும்!! உறுதிப்படுத்திய சாலிக்..!!

Published: 4 Jun 2025, 7:23 PM |
Updated: 4 Jun 2025, 7:29 PM |
Posted By: Menaka

துபாயின் டோல் கேட் ஆபரேட்டரான சாலிக் PJSC, வருகின்ற ஈத் அல் அதா விடுமுறை நாட்கள் முழுவதும் சுங்கக் கட்டணம் அமலில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ஜூன் 5 முதல் 8 வரை (வியாழன் முதல் ஞாயிறு வரை) சாலிக் டோல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT
  • பீக் ஹவர்ஸ் (காலை 6–10 மணி & மாலை 4–இரவு 8 மணி): 10 சாலிக் கேட்களில் ஏதேனும் ஒன்றைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் 6 திர்ஹம்ஸ்
  • ஆஃப்-பீக் ஹவர்ஸ் (காலை 10–மாலை 4 & இரவு 8–அதிகாலை 1 மணி): ஒரு பயணத்திற்கு 4 திர்ஹம்ஸ்
  • இலவச நேரம்: (அதிகாலை 1–6 மணி) எந்த கட்டணமும் பொருந்தாது

இந்த விலை நிர்ணயம் ஜனவரி 31, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட மாறக்கூடிய சுங்கக் கட்டண முறையைப் பின்பற்றுகிறது, மேலும் வார நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் என அனைத்திற்கும் இந்த கட்டணம் பொருந்தும். இதன் மூலம் பொது விடுமுறை நாட்களில் டோல் கேட்கள் இலவசம் அல்ல, ஆனால் அதே திட்டமிடப்பட்ட கட்டணங்களைப் பின்பற்றுகின்றன என்று சாலிக் தெளிவுபடுத்தியுள்ளது.

அதே நேரத்தில் விடுமுறைக்காக ஜூன் 5 முதல் 8 வரை துபாயில் பொது பார்க்கிங் இலவசம். இருப்பினும், விடுமுறை காலத்தில் மல்டி டெர்மினல் வாகன நிறுத்துமிடங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். எனவே இந்த பெருநாளில் குடியிருப்பாளர்கள் இலவச பொது வாகன நிறுத்துமிடத்தை அனுபவிக்க முடியும் என்றாலும், சாலிக் கட்டணங்கள் வழக்கமான நேர அடிப்படையிலான கட்டமைப்பின்படி இன்னும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel