அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கக் கூடிய ‘ஷார்ஜா சம்மர் பிரமோஷன்ஸ் 2025′ வரவிருக்கும் ஜூலை 1 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறவுள்ளது. இந்தாண்டு பதிப்பில் ஷார்ஜா முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு பிரச்சாரம் முன்னணி உள்ளூர் மற்றும் உலகளாவிய பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு 75% வரை தள்ளுபடியை உறுதியளிக்கிறது.
ஷார்ஜா வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்துடன் (SCTDA) இணைந்து ஷார்ஜா வர்த்தகம் மற்றும் தொழில்துறை சபை (SCCI) அறிமுகப்படுத்திய இந்த ஆண்டு நிகழ்ச்சியில், தங்கக் கட்டிகள், ஷாப்பிங் வவுச்சர்கள் மற்றும் ஷாப்பிங் செய்பவர்கள் மற்றும் ஹோட்டல் விருந்தினர்களுக்கான பரிசுகள் உட்பட பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்வுகள், ஹோட்டல் சலுகைகள் மற்றும் ரேஃபிள் டிராக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு புதிய ஸ்மார்ட் செயலியானது வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் ரேஃபிள்களில் சேர அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அப்துல்லா சுல்தான் அல் ஓவைஸ் (SCCI தலைவர்), காலித் ஜாசிம் அல் மிட்ஃபா (SCTDA தலைவர்) மற்றும் ஷார்ஜாவின் வணிக மற்றும் சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்த பிற அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் இந்த வெளியீடு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel