துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், ஈத் அல் அதா விடுமுறையின் போது, பாரம்பரிய அப்ராவில் சவாரி செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஃபஸ்ஸா (Fazza) என்று பிரபலமாக அறியப்படும் பட்டத்து இளவரசர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அப்ரா பயணத்தின் ஒரு சிறிய வீடியோவைப் பகிர்ந்து கொண்டார், இது அவரது 17 மில்லியன் ஃபாலோவர்ஸ்க்கு வியப்பை ஏற்படுத்தியது.
துபாய் க்ரீக் முழுவதும் அல் சீஃப் சந்தையை நோக்கி அவர் பயணம் செய்யும் அரிய காட்சியை அந்த வீடியோவில் காணமுடிகிறது. ஓல்டு துபாயில் உள்ள பரபரப்பான சந்தையில் பாரம்பரிய மசாலாப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உணவுகளின் காட்சிகளையும் அவர் படம் பிடித்து பகிர்ந்து கொண்டார். அவ்வப்போது தனது வாழ்க்கையின் அழகான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அறியப்பட்ட ஷேக் ஹம்தான், இந்த மார்ச் மாதம் பிறந்த தனது இளைய மகள் ஹிந்துடன் ஒரு நெகிழ்ச்சியான ஈத் தருணத்தையும் பதிவிட்டார்.
சமூக ஊடகங்களுக்கு அப்பால், துபாயின் பொது போக்குவரத்தை வடிவமைப்பதில் அவர் தீவிர பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, துபாய் டிராம் விரிவாக்கம், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மற்றும் எதிர்கால பறக்கும் டாக்சிகள் போன்ற திட்டங்களை ஆதரிக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், துபாயின் RTA, கடல் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, புதிய தலைமுறை நவீன அப்ராக்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel